Subscribe to Gizbot

2015-ஆம் ஆண்டில் நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 10 புரளிகள்..!

Written By:

பூமி அழிய போதுனு சொல்லுவான், ஏலியன்கள் இதோ வந்துடுச்சினு சொல்லுவான், இப்படி இன்டர்நெட்டில் நம் குசும்புக்கார மக்கள் செய்யும் வேலைகள் கொஞ்சம் நஞ்சமில்லை. அப்படியான இன்டர்நெட் புரளி கிளப்பிகள், கடந்த 2015-ஆம் ஆண்டிலும் ஒரு குறையும் வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படியாக, உலகம் இருளில் மூழ்கும் என்று ஆரம்பித்து சுவரில் தெரிந்த மர்மமான முகம் வரையிலாக நம்ம ஆட்கள் கிளப்பி விட்டு, நம்மையெல்லாம் முட்டாளாய் ஆக்கிய சில கொடுமையான புரளிகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புரளி நம்பர் 01 :

புரளி நம்பர் 01 :

ரத்த நிலா (Blood Moon) காரணத்தால் நவம்பர் மாதத்தில் உலகம் 15 நாட்கள் இருளில் மூழ்கும் என்று நாசா கூறியதாக வெளியான தகவல்.

ரத்த நிலா :

ரத்த நிலா :

ஆரம்பமாகிறது உலகின் அழிவு..!

புரளி நம்பர் 02 :

புரளி நம்பர் 02 :

மார்க் சுக்கர்பெர்க் ஃபேஸ்புக் போஸ்ட்டை பகிர்ந்தால் பணம் கிடைக்கும் என்று கிளம்பிய புரளி, இன்டர்நெட்டில் தீயாய் பரவியது.

புரளி நம்பர் 03 :

புரளி நம்பர் 03 :

அமெரிக்கா நிலாவிற்கு செல்லவே இல்லை அது ஏமாற்று வேலை, படமாக்கப்பட்ட ஒன்று. அதற்கு நானும் உடந்தை என்று பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick ) விளக்கம் அளிப்பது போன்று வெளியான யூட்யூப் வீடியோ.

ஆதாரங்கள் :

ஆதாரங்கள் :

அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

புரளி நம்பர் 04 :

புரளி நம்பர் 04 :

ஒருவரை ஒருவரை தாக்கி சண்டைப்போட்டுக் கொள்ளவும், உங்களுக்கு பொருத்தமான சண்டையாளரை தேர்ந்தெடுக்கவும் உதவும் என்று அறிமுகமான போலி ஆப் ஆன ரம்ப்ளர் (Rumblr).

புரளி நம்பர் 05 :

புரளி நம்பர் 05 :

ஒரு வியட்நாமிய முதல் பெயர் (பிச் (Bich) என்ற முதல் பெயர்) ஃபேஸ்புக்கில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இது வியட்நாம் மக்களுக்கு எதிரான செயல் என்று ஃபேஸ்புக்கில் ஆஸ்திரேலியர் ஒருவர் புகைப்படத்துடன் போஸ்ட் செய்து இருந்தார். அது பெரும் பரபரப்பை கிளப்பியது பின் அது ஊடகங்களை முட்டாளாக்க செய்யப்பட்ட வேலை என்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

புரளி நம்பர் 06 :

புரளி நம்பர் 06 :

மனித கழிவை உணவாய் மாற்ற நாசா ஆராய்ச்சியாளர்களுக்கு 200,000 டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புரளி நம்பர் 07 :

புரளி நம்பர் 07 :

பாரீஸ் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ப்ளே ஸ்டேஷன் 4 (Play Station 4) பயன்படுத்தப்பட்டது என்று வெளியான செய்தி.

புரளி நம்பர் 08 :

புரளி நம்பர் 08 :

பாரீஸ் தாக்குதலுக்கு முன் சீக்கிய தீவிரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டும் கையில் குரான் உடனும் செல்பீ எடுப்பது போன்று வெளியாகி பரபரப்பை கிளப்பிய ட்விட்டர் பதிவு..!

புரளி நம்பர் 09 :

புரளி நம்பர் 09 :

ஹியூஸ்டன் நகரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சாலையில் சுறா ஒன்று நீந்தி செல்வது போல் வெளியாகி பீதியை கிளப்பிய ட்விட்டர் பதிவு..!

புரளி நம்பர் 10 :

புரளி நம்பர் 10 :

டெக்ஸஸ் நகரில் உள்ள சுவர் ஒன்றில் மர்மமான முறையில் வெளிப்படும் முகம் போன்ற உருவம் உள்ளடங்கிய புகைப்படம்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

'மேலும்' ஒரு ரகசியத்தை வெளியிட்டது - விக்கிலீக்ஸ்..!


வெளி உலகத்திற்கு தெரியாத, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ரகசியங்கள்..!


சிக்கியது புகைப்பட ஆதாரம் : 100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் புதின்..!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The biggest internet viral hoaxes of 2015. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot