இனி உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்ட் இன்னும் பலமானதாகும்.! எப்படி.?

பாஸ்வேர்ட் சார்ந்த ஒரு புதிய சேவையை பேஸ்புக் ஒரு சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை மூலம் நமக்கென்ன லாபம்.?

Written By:

பேஸ்புக் - பெரும்பாலானோர்களின் சுய சரித (அதாவது வாழ்க்கை வரலாறு) பக்கங்களாக திகழ்கிறது. அதற்கேற்ப பேஸ்புக்கும் அற்புதமான அம்சங்களை வழங்கி கொண்டே தான் இருக்கிறது. சரி விடயத்துக்கு வருவோம் - பேஸ்புக் நமக்கு வழங்கும் அம்சங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது - பாதுகாப்பு அம்சங்கள் தான். ஏனெனில் அதி ஓட்டை விழுந்தால் எல்லாமே "காலி".!

பாதுகாப்பு அம்சம் என்று கூறியதும் நம் அனைவருக்குமே முதலில் நினைவில் குதிப்பது - பாஸ்வேர்ட் அதாவது கடவுச்சொல் தான். பேஸ்புக் மட்டுமின்றி மொபைல் லாக் தொடங்கி கூகுள் அக்கவுண்ட் வரையிலாக அங்கிருந்து தான் நமது பாதுகாப்பு தொடங்குகிறது. அப்படியான பாஸ்வேர்ட் சார்ந்த ஒரு புதிய சேவையை பேஸ்புக் ஒரு சில நாட்களுக்கு முன்பு அறிமுகம்ஸ் செய்துள்ளது. இந்த புதிய சேவை மூலம் நமக்கென்ன லாபம்.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கடவுச்சொல்லை மறந்தாலும்

இந்த புதிய சேவையின் முக்கிய நோக்கமே கடவுச்சொற்களை அடிக்கடி மறந்து போகும் பயணர்களுக்கு உதவுவது தான். அதாவது கிட்ஹப் பயனர்கள் கடவுச்சொல்லை மறந்தாலும் கூட எளிதாக அவர்களின் முகநூல் கணக்குகளை அணுக அனுமதிக்கப்படுவார்கள்.

கூட்டு மென்பொருள்

உலகின் மிக பிரபலமான மென்பொருள் சிலவற்றை வழங்கும் கிட்ஹப் (GitHub) என்பது பேஸ்புக் போன்ற சொந்தமான திறந்த மூல திட்டங்களுக்கான ஒரு கூட்டு மென்பொருள் உருவாக்க மேடையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியுரிமை

இந்த புதிய சேவையின் அறிவிபின் போது பேஸ்புக் பாதுகாப்பு பொறியாளர் பிராட் ஹில் "ஒரு மின்னஞ்சல் முகவரி அல்லது ஒரு தொலைபேசி எண்ணுடன் தொடர்புடையது என்பதை பொருட்படுத்தாமல் இந்த நம்பகமான செயல்முறை மூலம் ஒரு நல்ல, எளிதான , பாதுகாப்பான மற்றும் தனியுரிமைக்கு மரியாதை வழங்கும் அணுகலை பெற முடியும்" என்று கூறியுள்ளார்.

செயல்முறை

முதலில் பயனர்கள் அவர்களின் பேஸ்புக் கணக்கில் ஒரு மீட்பு (ரீக்கவரி) டோக்கனை முன்கூட்டியே சேமிப்பதன் இந்த செயல்முறையை தொடங்க வேண்டும். அந்த மீட்பு டோக்கன் குறியாக்கம் செய்யப்பட்டது எனவே பேஸ்புக்'கால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை படிக்க முடியாது. எப்போதாவது உங்கள் கணக்கை மீட்க வேண்டிய சூழல்ஏற்பட்டால் மீட்பு டோக்கன் உங்களுக்கு உதவும்.

பகிரப்படாது

இந்த செயல்முறையின் கீழ் கிட்ஹப் மற்றும் பேஸ்புக் ஆகியவைகளுக்கு இடையே எந்த விதமான தனிப்பட்ட தரவு பகிரப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள பேஸ்புக்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook is introducing new service to solve forgotten password issues. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்