பேராபத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே கணித்த தீர்க்கதரிசி..!

Written By:

உலகில் ஒரு விடயம் நடக்கும் முன்பே கணித்து அதனினை சரியாகச் சொல்பவரை தீர்க்கதரிசி என்பார்கள். தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்களை இது போல் பலர் சரியாகவும், சிலர் தோராயமாகவும் கணித்திருக்கின்றனர். ஆனால் கணிப்புகள் எப்போதும் சரியாகி விடாது, மாறாக பெரும்பாலான கணிப்புகள் தவறாகவோ அல்லது நடக்காமலோ போகும்.

இதையும் பாருங்கள் : ஒன்பது லக்கினங்களில் உச்சம் பெற்றவரும் சிக்கும் 'மின்-வலை'.!!

ஆனால் எதிர்காலத்தில் இது நிச்சயம் நடக்கும் என்பதை 18 ஆம் நூற்றாண்டிலேயே சரியாக கணித்த தீர்க்கதரிசி மற்றும் அவர் கணித்த டிரோன் போர் குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிரோன் போர்

டிரோன்களை பயன்படுத்திப் போர் எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும் என்பதை நிகோலா டெஸ்லா 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சரியாக கணித்திருப்பது தெரியவந்துள்ளது.

கண்டுபிடிப்பு

மின்சார அமைப்புகளில் பங்களிப்பு வழங்கியதோடு ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி மற்றும் டிரோன் போன்றவை மனித இனத்தை அழிக்கும் என்பதை நிகோலா டெஸ்லாவின் கணித்திருக்கின்றார்.

காப்புரிமை

1898 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி வழங்கப்பட்ட காப்புரிமை குறித்து டெஸ்லா எழுதிய குறிப்புகளில் தனது புதிய கண்டுபிடிப்பு குறித்த தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார்.

கருவி

அதன் படி தான் கண்டுபிடிக்க இருக்கும் கருவி 'வையர் மற்றும் மின் கடத்திகள் எதையும் பயன்படுத்தாது. மேலும் பாத்திரங்களை அலை, தூண்டுதல் மற்றும் கதிரியக்கங்களின் மூலம் குறிப்பிட்ட பாதை வரை செல்லும்' எனத் தனது குறிப்பில் டெஸ்லா குறிப்பிட்டிருந்தார்.

புதிது

இந்தக் காப்புரிமை வழங்கப்பட்ட காலகட்டத்தில் ரேடியோ அலைகள் மிகவும் புதுமையான ஒன்றாகும். அவர் இவற்றை 'மின் ஏற்றத்தாழ்வுகள் எவ்வித பாதையையும் பின்பற்றாது, மாறாக அவை சீரான நேர்கோட்டில் பயணிக்கும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பெயர்

இந்தக் காப்புரிமை "Method Of And Apparatus For Controlling Mechanism of Moving Vessels or Vehicles" என்ற தலைப்பு கொண்டிருந்தது. இதன் தன்மையானது எவ்வித அழிவுகளையும் செய்யாது என்பதால் இவை மற்ற நாடுகளுடன் அமைதியைக் கொண்டு வரும் என டெஸ்லாவின் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

தொழில்நுட்பவியலாளர்

நிகோலா டெஸ்லாவின் காப்புரிமை மற்றும் தரவுகளை இண்டர்நெட் உலகிற்குக் கொண்டு வந்தவர் தொழில்நுட்பவியலாளர் மேத்யூ ஸ்க்ராயர் என்பவர் ஆகும். இவர் காப்புரிமைகளை ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

கணிப்பு

டிரோன் போர் முறைகள் இன்னும் முழு வீச்சில் களம் காணவில்லை என்றாலும் ஒரு நூற்றாண்டிற்கு முன்பே டிரோன் குறித்து டெஸ்லா கணித்திருக்கின்றார்.

கண்டுபிடிப்பு

இன்று ஒவ்வொரு நாட்டு ராணுவமும் அதிகளவு தயார் செய்து வரும் போர் உபகரணங்களில் ஆளில்லா விமானங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா மட்டும் டிரோன் தாக்குதல்களின் மூலம் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

உலகப் போர்

உலகின் முதல் டிரோன் அல்லது ஆளில்லா விமானம் முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது. தி கெட்டரிங் பக் (The Kettering Bug) என்ற விமானம் வெடிகுண்டுகளைக் குறிப்பிட்ட பாதையின் கொண்டு சென்று வெடிக்கச் செய்தது.

செலவு

இவ்வகை ஆளில்லா விமானங்களின் கட்டமைப்பு கட்டணங்கள் அந்த காலத்தில் மிக அதிகமாகும். மேலும் வானில் ஏவப்பட்டால் மீண்டும் அதன் பாதையை மாற்றவோ அவற்றைத் திரும்ப பெறவோ முடியாது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Nikola Tesla Predicted Drone Warfare in 18th Century Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்