சீனாவின் 2020 கனவு..? பலிக்குமா..? பழி வாங்குமா..?!

|

சீனா தனது முதல் செவ்வாய் மற்றும் செவ்வாய் கிரக ரோவர் வடிவமைப்பு போன்ற விண்வெளி ஆய்வு சார்ந்த தகவல்களை முதன்முறையாக உலகின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளது. சீனாவின் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது 2020-ஆம் ஆண்டின் மத்தியில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங்கில் வெளியான அறிவிப்பின் ஒரு பகுதியாக, சீன அதிகாரிகள் பிரயாண விண்கலத்தின் பெயர் மற்றும் லோகோ சார்ந்த ஒரு பொது போட்டி தொடங்கியும் உள்ளது.

செவ்வாய் :

செவ்வாய் :

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிறுவனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கி ஆய்வு நிகழ்த்தப்போகும் ஆறு சக்கர ரோவரின் சித்தரிக்கப்பட்ட கணினி படங்களை வெளியிட்டுள்ளது.

தரவு :

தரவு :

அந்த ரோவர் ஆனது சிவப்பு கிரகத்தின் மண், வளிமண்டலம் பனிக்கட்டி அல்லது தண்ணீர் உட்பட மற்ற அம்சங்களை கண்டுபிடிக்கும், தரவுகளை அனுப்பும் என்று நம்பப்படுகிறது.

வெற்றி :

வெற்றி :

இதுவரை, அமெரிக்கா மட்டுமே வெற்றிகரமாக செவ்வாயில் ரோவரை தரையிறக்கியுள்ள ஒரே நாடாகும், மறுபக்கம் அடுத்ததாக ஒரு கூட்டு ஐரோப்பிய - ரஷியன் பணி நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய பிரிட்டிஷ் தலைமையிலான முயற்சி தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்பாதை :

சுற்றுப்பாதை :

எப்படி பார்த்தாலும் அமெரிக்கா, ரஷ்யா/சோவியத் ஒன்றியம், ஐரோப்பா மற்றும் இந்தியாவை தொடர்ந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடையும் ஐந்தாவது நாடாக சீனா திகழலாம்.

குவாண்டம் இயற்பியல் :

குவாண்டம் இயற்பியல் :

கடந்த ஆகஸ்ட் 16 அன்று குவாண்டம் இயற்பியல் செயல்படுத்தல் செயற்கைக்கோள் முன்மாதிரியை சோதனை செய்து தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது.

ஜேட் ரேப்பிட்  லூனார் :

ஜேட் ரேப்பிட் லூனார் :

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதன் ஜேட் ரேப்பிட் லூனார் ரோவர் ஆனது 31 மாத கால நிலவு ஆராய்ச்சிக்கு பின்னர் 'ஷட் டவுன்' செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரேடியோ தொலைநோக்கி :

ரேடியோ தொலைநோக்கி :

வெற்றிகரமாக நிலவில் ஒரு ரோவரை தரையிறக்கிய மூன்றாவது நாடாக சீனா திகழ்கிறது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா கட்டமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இது சூரியனை விட சக்தி வாய்ந்தது..! அதென்ன தெரியுமா..?


நாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்..!? பூமிக்கு வருகை தந்தது யார்..?


இலவசமாகும் நாசா தரவுகள் : இது ஆன்லைனில் மட்டுமே.!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
China unveils 2020 Mars mission probe and rover .Read more about this is in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X