வாட்ஸ்ஆப் இல் இந்த செட்டிங்ஸை உடனே மாத்திடுங்க பாஸ்...
வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் 700 மில்லியன் பேர்களில் நீங்களும் ஒருவரா அப்படியானால் உடனே இந்த செட்டிங்ஸை மாத்திடுங்க. ஏன் மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கே புரியும்..

இன்கமிங் மீடியா
வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் வரும் போட்டோ மற்றும் வீடியோக்கள் தானாக போன் மெமரியில் சேவ் ஆகும், இதனை தடுக்க வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் மெனு சென்று சாட் செட்டிங்ஸ் ஆப்ஷனில் சேவ் இன்கமிங் மீடியா என்ற ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதுமானது.

மெசேஜ் ப்ரீவியூ
வாட்ஸ்ஆப் இன்கமிங் மெசேஜ்கள் புஷ் நோட்டிபிகேஷன்களாக வரும், ஆனால் இதனை ஆஃப் செய்யவும் முடியும். இதை செய்ய "Settings,சென்று " choose "Notifications" ஆப்ஷனில் "Show Preview" பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஷேர்
நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை நண்பர்களுக்கு தெரிவிக்க சாட் பாக்ஸின் இடது புறத்தில் இருக்கும் அம்பு குறியை க்ளிக் செய்து "Share Location" ஆப்ஷனை தேர்வு செய்தால் போதுமானது.

லாஸ்ட் சீன்
வாட்ஸ்ஆப் ப்ரைவஸி செட்டிங்ஸ் அனைவரையும் லாஸ்ட் சீன் ஸ்டேட்டசை பார்க்க அனுமதிக்கும், இதை மாற்ற "Settings," சென்று "Account" ஆப்ஷனில் "Privacy" க்ளிக் செய்து "Last Seen" க்ளிக் செய்ய வேண்டும்.

ஆட்டோமேடிக் பேக்கப்
வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் ஆட்டோமேடிக் பேக்கப் செய்ய "Settings" சென்று "Chat Settings" ஆப்ஷனில் "Chat Backup" க்ளிக் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








