செகண்ட் ஹேண்ட் போன்களை விற்பனை செய்ய சாம்சங் திட்டம்.!?

Written By:

அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் தென் கொரியாவின் சாம்சங் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போட்டி மற்றும் பஞ்சாயத்து உலகம் அறிந்த ஒன்றே. ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி இடம் பிடிக்க இந்நிறுவனங்களிடையே நடக்கும் போட்டியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்கள் : டோரண்ட் டவுன்லோடு ஜெயிலுக்கு அனுப்பும் : பீதியைக் கிளப்பும் விதிமுறை.!!

ஆப்பிள் நிறுவனம் போல் சாம்சங் நிறுவனமும் தனது கருவிகளை ரீஃபர்பிஷ்டு முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

செகண்ட் ஹேண்ட்

உலகளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் செய்வதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் செகண்ட் ஹேண்ட் கருவிகளை விற்பனை செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரீஃபர்பிஷ்டு

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வாடிக்கையாளர்கள் ரீஃபர்பிஷ்டு அதாவது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட உயர் ரக சாம்சங் கருவிகளை வாங்க முடியும் எனக் கூறப்படுகின்றது.

விற்பனை

ஒரு ஆண்டு அப்கிரேடு திட்டத்தின் கீழ் வாங்கி திருப்பியளிக்கப்பட்ட சாம்சங் கருவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

சலுகை

இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு எந்தளவு சலுகை மற்றும் இந்தக் கருவிகள் எந்தெந்த சந்தைகளில் கிடைக்கும் என்ற தகவல்கள் சரியாக வெளியிடப்படவில்லை.

ஆப்பிள்

சாம்சங் நிறுவனத்தின் மிக முக்கிய போட்டியாளரான ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் தனது கருவிகளை ரீஃபர்பிஷ்டு முறையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ரூ.43,000, கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.50,000 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

போட்டி

சாம்சங் நிறுவனத்தின் புதிய முடிவு இந்தியாவில் அதிகம் விற்பனாயாகும் சீன ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.

அதிகம்

மேலும் இந்தியாவில் விலை அதிகமாகக் கிடைக்கும் சாம்சங் கருவிகளின் விற்பனை இந்தத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பாதிப்பு

சாம்சங் நிறுவனத்தின் ரீஃபர்பிஷ்டு முறை மூலம் அந்நிறுவனத்தின் விலை குறைந்த பட்ஜெட் கருவிகளின் விற்பனை குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Samsung is said to sell refurbished phones soon Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்