புதிய ஆப்ஸ் மார்கெட்டை உருவாக்க மாசிலா திட்டம்!
பிரவுசர் உலகை கலக்கி கொண்டு இருந்த மாசிலா நிறுவனம் இப்போது புதிய யுக்தியை கையாள இருக்கிறது. அப்ளிக்கேஷன்களை வழங்கும் புதிய ஆப்ஸ் ஸ்டோரை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது மாசிலா. தொழில் நுட்பத்தினை பொருத்த வரையில் எந்த நிறுவனம் எப்போது என்ன புதிய படைப்புகளை ஆரம்பிக்கும் என்பதை சரியாக
யூகிப்பது சற்று கடினமாக இருக்கிறது. இதனால் அதிரடியான பல மின்னணு சாதன படைப்புகள் தொழில் நுட்ப சாதன உலகில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்த கருத்துக்கு ஏற்ற வகையில் மாசிலா பிரவுசர் நிறுவனம் இப்போது அப்ளிக்கேஷன்களையும் வழங்க திட்டமிட்டு இருக்கிறது. இது தொழில் நுட்பத்தினை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஓர் இனிய செய்தி என்றே கூறலாம். மாசிலா மார்கெட் ப்ளேஸ் என்ற பெயரில் அப்ளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்க இருக்கிறது இந்நிறுவனம்.
மாசிலா நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனையும் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ், மைக்ரோசாஃப்டு விண்டோஸ் போன்ற இயங்குதளத்தில் இயங்குவதாக இருக்கும்.
இது பற்றி தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களிடம், மாசிலா பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications









