இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ எக்ஸ் ப்ளே..!!
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ எக்ஸ் ப்ளே கருவி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. தலைநகர் புது தில்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகமான மோட்டோ எக்ஸ் ப்ளே 16 ஜிபி ரூ.18,499க்கும் 32ஜிபி ரூ.19,999க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் இவை பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஆபத்து : நீங்க சிக்கிடாதீங்க..!!

சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ எக்ஸ் ப்ளே 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 எஸ்ஓசி 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஈ வசதி கொண்ட இந்த கருவி ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளமும் 21 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் இலவச அழைப்பு மேற்கொள்வது எப்படி..??

மோட்டோ எக்ஸ் ப்ளே கருவியில் ஃபுல் எச்டி வீடியோ பதிவு செய்ய முடியும் என்பதோடு முன்பக்க கேமராவில் ப்ளாஷ் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 3630 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 16 ஜிபி மற்றும் 32ஜிபி என இரு வகை மெமரி கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications