ரிலையன்ஸ் ஜியோ 'வெல்கம் ஆஃபர்' காலம் நீட்டிப்பு...

ஜியோ துவங்கும் முன் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வெல்கம் ஆஃபர் காலம் நீட்டிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் திட்டமிட்ட இலக்கை எட்டுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 2016க்குள் சுமார் 100 மில்லியன் பேர் ஜியோ பயனர்களைப் பெற வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி திட்டமிட்டிருந்தார்.

ஜியோவிற்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல் குறித்த தகவல்களை மோட்டிலால் ஒஸ்வால் தெரிவித்துள்ளார்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விநியோகம்

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களைத் தவிர்த்து மற்ற விற்பனை நிலையங்களிலும் விநியோகம் செய்ய ஜியோ திட்டமிடுவதாக மோட்டிலால் தெரிவித்துள்ளார்.

நீட்டிப்பு

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வெல்கம் ஆஃபர் காலத்தை நீட்டித்தும், ரூ.200-300 விலையில் புதிய திட்டங்களை அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேகம்

ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் அறிமுகம் செய்து மூன்று மாதங்கள் நிறைவுற்ற நிலையில் அந்நிறுவனம் உறுதியளித்த படி ஜியோ வேகம் இல்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிகப்படியான பயன்பாடு காரணமாக வேகம் குறைந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி

ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட இந்தியாவின் ஒரே நிறுவனம் பாரதி ஏர்டெல் மட்டும் தான் என மோட்டிலால் தெரிவித்துள்ளார். இரு டெலிகாம் நிறுவனங்களும் தங்களது பலம் கொண்டு லாபம் ஈட்ட 12-18 மாதங்கள் இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லாபம்

ஏர்டெல் நிறுவனம் ரூ.50,000- ரூ.60,000 கோடியில் இருந்து அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.2,25,000 - ரூ.2,30,000 கோடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ

அதிகப்படியான முதலீடு காரணமாக ரிலையன்ஸ் ஜியோ லாபம் ஈட்டக் குறைந்த பட்சம் 8-10 ஆண்டுகள் வரை ஆகும் என மோட்டிலால் தெரிவித்துள்ளார்.

ரிஸ்க்

தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் போது தான் ரிலையன்ஸ் ஜியோவின் உண்மை நிலை தெரியவரும். தற்சமயம் வரை பெரும்பாலான பயனர்கள் ஜியோ சிம் கார்டினை இரண்டாவது சிம் கார்டு போன்றே பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Jio may extend its welcome offer and introduce new plans
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்