ஜிமெயில் தந்திரங்கள், இதெல்லாம் புதுசா வந்திருக்காம், உங்களுக்குத் தெரியுமா?

ஜிமெயில் என்றதும், எங்களுக்கு எல்லாம் தெரியும்னு சொல்றவங்க தான் அதிகம். ஆனாலும் இந்தப் புதிய அம்சங்கள் எத்தனைப் பேருக்கு தெரியும்.. புது அம்சங்களைப் பார்ப்போமா?

By Meganathan
|

ஜிமெயில் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியுமானு தெரியல. மற்ற சேவைகளை விட ஜிமெயில் தான் ஈசியான பயன்பாட்டினை வழங்குகின்றது. இதனாலேயே இதனைப் பலரும் பயன்படுத்துகின்றனர்.

காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து ஜிமெயில் சேவையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அதிகளவு புதிய அம்சங்களை ஜிமெயில் வழங்கியுள்ளது.

அதான் தெரியுமேனு சொல்லாதீங்க, இங்குத் தொகுக்கப்பட்ட இந்த அம்சங்கள் எல்லாம் தெரியுமா, என்னென்னு இங்க பாருங்க..

ஷெட்யூல்

ஷெட்யூல்

இப்போவே ஒரு மெயிலை டைப் செய்து, அதனை அப்புறமா அனுப்பத் தான் ஷெட்யூல் மெயில் ஆப்ஷன் இருக்கின்றது. இதனை எப்படிப் பயன்படுத்துறது?

* முதலில் பூமராங் (Boomerang) எனும் க்ரோம் எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டல் செய்ய வேண்டும், இதனை க்ரோம் பிரவுஸரில் மட்டுமே செயல்படுத்த முடியும்.

* பின் ஜிமெயிலை ஓபன் செய்து மெயில் டைப் செய்து முடித்தால் மெயிலை அனுப்பும் பட்டனிற்குக் கீழ் பின்னர் அனுப்பக் கோரும் ஆப்ஷன் இருக்கும். இங்கு அனுப்பப்பட வேண்டிய தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்து கிளிக் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்னூஸ்

ஸ்னூஸ்

இந்த ஆப்ஷன் உங்களுக்கு வரும் மெயில்களை இன்பாக்ஸ்'இல் சிறிது நேரம் கழித்து உங்களுக்கு வேண்டிய நேரத்தில் காண்பிக்கச் செய்யும். இதனை எப்படிப் பயன்படுத்துவது?

* இதற்குப் பூமராங்க ஆப்ஷனில் மின்னஞ்சல்களைத் தேர்வு செய்து உங்களுக்கு வேண்டிய நேரத்தினைப் பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.

கீபோர்டு ஷார்ட்கட்

கீபோர்டு ஷார்ட்கட்

ஜிமெயிலில் கீபோர்டு ஷார்ட்கட்களைச் செயல்படுத்த,
* Settings சென்று General ஆப்ஷனில் Keyboard Shortcuts ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். புதிய மாற்றங்களைச் சேவ் செய்ய வேண்டும்.

* அடுத்து கீபோர்டின் Shift மற்றும் ? பட்டன்களை ஒன்றாகக் கிளிக் செய்தால் அனைத்து ஷார்ட்கட்களையும் பார்க்க முடியும்.

திரெட்

திரெட்

அதாவது ஒரு குறிப்பிட்ட மெயில் சார்ந்த பதில்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டவற்றைத் தான் திரெட் என ஜிமெயில் அழைக்கின்றது. இதில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்வது எப்படி?

* இந்த ஆப்ஷனை செயல்படுத்த முதலில் குறிப்பிட்ட மெயிலை தேர்வு செய்து More ஆப்ஷனில் Mute ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதற்கான ஷார்ட்கட் பயன்படுத்த கீபோர்டின் 'M' எழுத்தினைக் கிளிக் செய்ய வேண்டும்.

* இவ்வாறு செய்வதால் திரெட் மெயில்களில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

உங்கள் மின்னஞ்சல்களை யார் திறக்கின்றனர் என்பதைப் பார்க்க முடியும். இதற்கு

* இதற்குச் சைடுகிக் (Sidekick) எனும் க்ரோம் எக்ஸ்டென்ஷன் அவசியம் ஆகும். முதலில் இதனை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

* இந்த எக்ஸ்டென்ஷன் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை டிராக் செய்யும். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை மற்றவர் திறக்கும் போது எக்ஸ்டென்ஷன் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பும்.

* நீங்கள் ஏதேனும் லின்க்'களை அனுப்பும் போது அவற்றை யார் யார் கிளிக் செய்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அன்செண்ட்

அன்செண்ட்

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்பப் பெற முடியும், இதற்கு..

* இந்த ஆப்ஷனினை செயல்படுத்த முதலில் Settings -- Undo Send -- Enable Undo Send -- cancellation period ஆப்ஷனில் எத்தனை நேரம் என்பதைக் குறிப்பிட்டுப் பின் நீங்கள் செய்த மாற்றங்களைச் சேவ் செய்ய வேண்டும்.

அன் சப்ஸ்கிரைப்

அன் சப்ஸ்கிரைப்

இணையத்தில் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்த அனைத்துத் தளங்களையும் அன் சப்ஸ்கிரைப் செய்ய முடியும்.

* முதலில் Unroll.me தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* பதிவு செய்ததும் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்த தளங்களைப் பார்க்க முடியும், இவற்றில் உங்களுக்குத் தேவையானவற்றை அன் சப்ஸ்கிரைப் செய்யலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Gmail tricks to make your life a lot easier

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X