இன்றுடன் மூடப்படுகின்றது பாக்ஸ்கான் நிறுவனத்தின் சென்னை ஆலை

Written By:

தாய்வான் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், சென்னை ஆலையை இன்றுடன் நிறுத்துகின்றது. சமார் 1306 பேர் பணியாற்றி வந்த இந்த ஆலையில் பெரும்பாலும் நோக்கியா போன்களின் பாகங்களே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன, கடந்த சில மாதங்களுக்கு முன் நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனமும் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் மூடப்படுகின்றது பாக்ஸ்கான் நிறுவனத்தின் சென்னை ஆலை

இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உழியர்களுக்கு தகுந்த நிவாரனம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இரு ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருபவர்களுக்கு 12 மாதங்களின் முடிவில் சுமார் 50,000 ரூபாய் பெறுவார்கள்.

இது குறித்து அந்நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி தெரிவிக்கும் போது ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை, எனினும் இது பிரிவினை தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் என்றார். பாக்ஸ்கான் நிறுவனம் ஜனவரி மாதம் மட்டும் சுமார் 1.8 கோடி ரூபாய் செலவு செய்திருப்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 650 ஊழியர்களுக்கு நோக்கியா ஆலை மூடப்பட்டதில் இருந்து இந்நிறுவனம் சம்பளம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Foxconn to shut down Chennai unit on February. Taiwanese phone-part manufacturer Foxconn, which had suspended its Chennai operations will be shut down from Today.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்