கூகுளுக்கு சரியான முகவரியை அளித்து சிறப்பான சேவையை பெற எளிய வழிகள்

கூகுளுக்கு சரியான முகவரியை அளித்து சிறப்பான சேவையை பெற எளிய வழிகள்

By Siva
|

கூகுள் நிறுவனம் தங்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரிய, ஆச்சரியம் தரும் சேவைகளை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகை சேவைகளில் ஒன்று நமது வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடத்தின் அருகில் உள்ள ஒருசில முக்கிய விபரங்களை குறிப்பாக ஓட்டல், ரெஸ்டாரெண்ட், தங்குமிடம் உள்ளிட்ட விபரங்களை நமக்கு தெரியப்படுத்தும். இதன் மூலம் நமக்கு நல்ல உணவும், இன்னபிற பயன்களும் ஏற்படும்

கூகுளுக்கு சரியான முகவரியை அளித்து சிறப்பான சேவையை பெற எளிய வழிகள்

இந்த நிலையில் நீங்கள் ஒருவேளை வீட்டை மாற்றிவிட்டீர்கள் என்றோ அல்லது அலுவலகம் மாறிவிட்டீர்கள் என்றால் இந்த சேவை உங்களுக்கு பயனளிக்காமல் போய்விடும். ஏனெனில் உங்கள் பழைய முகவரிக்கு அருகில் உள்ள தகவல்களைத்தான் நீங்கள் பெறுவீர்கள்.

இந்த நிலையில் கூகுளில் நீங்கள் உங்களுடைய தற்போதைய முகவரியை பதிவு செய்துவிட்டால் உங்களுக்கு கூகுளால் கிடைக்கும் பயன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒருமுறை உங்களது தற்போதைய முகவரியை அப்டேட் செய்துவீட்டீர்கள் என்றால் கூகுளில் உள்ள அனைத்து அக்கவுண்ட்களிலும் உங்களது முகவரி தானாக அப்டேட் செயய்ப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

பிளிப்கார்ட் ஆப்பிள் நாட்கள் விற்பனை..! அதிரடி தள்ளுபடி..!

உங்களுடைய ஸ்மார்ட்போன்ப் ஆண்ட்ராய்ட் 6.0 அல்லது அதற்கு மேல் உள்ள வசதியில் இருந்தால் கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் மிக எளிதில் உங்களுடைய தற்போதைய முகவரியை அப்டேட் செய்யலாம் என்பது கு'றிப்பிடத்தக்கது.

தற்போது முகவரியை அப்டேட் செய்யும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்

கூகுளுக்கு சரியான முகவரியை அளித்து சிறப்பான சேவையை பெற எளிய வழிகள்

ஸ்டெப் 1: முதலில் கூகுள் அசிஸ்டெண்ட்டை ஓப்பன் செய்ய உங்களது ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை ஒரு லாங் பிரஸ் செய்யுங்கள்

கூகுளுக்கு சரியான முகவரியை அளித்து சிறப்பான சேவையை பெற எளிய வழிகள்

ஸ்டெப் 2: பின்னர் வலது ஓரத்தில் உள்ள செட்டிங் என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்
கூகுளுக்கு சரியான முகவரியை அளித்து சிறப்பான சேவையை பெற எளிய வழிகள்

ஸ்டெப் 3: பின்னர் அதில் உள்ள பெர்சனல் தகவல்கள் என்ற ஆப்சனில் ஹோம் மற்றும் வேலை பார்க்கும் இடத்தின் லொகேஷன் குறித்த ஆப்சனை டேப் செய்ய வேண்டும்

கூகுளுக்கு சரியான முகவரியை அளித்து சிறப்பான சேவையை பெற எளிய வழிகள்

ஸ்டெப் 4: அதில் வீடு மற்றும் வேலை பார்க்கும் இடத்தின் சரியான முகவரிகளை பதிவு செய்துவிட்டு பின்னர் ஓகே என்ற பட்டனை டேப் செய்ய வேண்டும்

ஸ்டெப் 5: அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. இனி உங்களுடைய தற்போதைய முகவரிக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்

Best Mobiles in India

Read more about:
English summary
Usually, Google uses our home and work address to provide us the information about our transportation, hotels, and restaurants nearby and much more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X