இளமைக்கு ஆப்பு வைக்கும் கேஜெட்கள் : எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்.!

Written By:

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதன கருவிகள் இல்லாமல் வாழவே முடியாது என்றாகிவிட்ட நிலையில் இதன் பயன்பாடு தீங்கு விளைவிக்கும் என்றும் இதன் மூலம் வீண் உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சாதன கருவிகளை அதிகளவு பயன்படுத்துபவர்கள் விரைவில் வயதான தோற்றம் பெறும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெக் நெக், தோல் சுருக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01

ஸ்மார்ட்போன், டேப்ளெட் மற்றும் கணினி போன்ற மின்சாதன கருவிகளை அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு சுருக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக மும்பையை சேர்ந்த தனியார் மருத்துவமனையின் அழகு சிகிச்சை மருத்துவர் வினோத் விஜ் தெரிவித்துள்ளார்.

02

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளை அதிக நேரம் பயன்படுத்தும் போது கழுத்து கீழே நோக்கி இருப்பதால் கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வலி ஏற்படும் என்றும் தலைவலி, உணர்வின்மை, மேல் மூட்டு பகுதிகளில் கூச்சம், கைகளில் வலி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

03

இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் மொபைல் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சுமார் 37.1 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவிகிதம் பேர் 19 முதல் 30 வயதுடையோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

04

கேஜெட்களை பயன்படுத்தும் போது அடிக்கடி விரல் முன்னோக்கி மடங்குவதால் முதுகெலும்பு , வளைவு, தசைநார்கள் , தசை நாண்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.

05

மின்சாதன கருவிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை அறியாத இன்றைய தலைமுறையினர் உடல் பிரச்சனைகளை தவிர்க்க கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மூத்த அழகு சிகிச்சை மருத்துவர் மோகன் தாமஸ் தெரிவித்துள்ளார்.

06

அதிகளவு ஸ்மார்ட்போன் பயன்பாடு கழுத்து தசை சுருங்கச்செய்வதோடு தோலில் ஈர்ப்பினை அதிகரிக்கின்றது, இதன் காரணமாக முகத்தில் சுருக்கம், தடிம தாடை போன்றவை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

07

தேவையில்லாத உடல் உபாதைகள் மற்றும் இளமையிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதில் ஸ்மார்ட்போன்கள் அதிக பங்காற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

08

இதோடு ஸ்மார்ட்போன் போன்ற மின்சார கேஜெட்களில் இருந்து வெளிப்படும் கதிர்களால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Doctors warn overuse of electronic gadgets could trigger early ageing Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்