பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் அறிமுகம்.!

Written By:

அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தமிழ் நாடு உட்பட 14 தொலைதொடர்பு வட்டங்களில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென 20 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராட்பேன்ட் வயர்லெஸ் அக்செஸ் ஸ்பெக்டரம்களை பிஎஸ்என்எல் தேர்வு செய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே சண்டிகரில் 4ஜி சேவையை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் அறிமுகம்.!

பல்வேறு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் அதிவேக இணைய இணைப்பான 4ஜி சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க திட்டமிட்டு வரும் நிலையில் இப்பட்டியலில் பிஎஸ்என்எல் புதிதாக இணைந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் அறிமுகம்.!

எனினும் 4ஜி வெளியீடு குறித்து சரியான தேதியை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. சண்டிகரில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் போது 35 எம்பிபிஎஸ் வேகம் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்சமயம் வரை ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றது.

இதோடு ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனமும் 4ஜி சேவையை விரைவில் வழங்க இருக்கின்றது.

 

English summary
BSNL to launch 4G services in 14 telecom circles in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்