இந்தியாவில் அறிமுகமாகும் ஆப்பிள் பே முறை

Posted by:

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பே முறை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[2015 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஆப்பிள் பொருட்கள்]

ஆப்பிள் பே முறையை பல நாடுகளுக்கு நீட்டிக்கும் முயற்ச்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் இந்தியாவும் அடங்கும் என்று ஐக்கிய நாடுகளை சேர்ந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் ஆப்பிள் பே முறை

ஆப்பிள் பே புதிய முறையை ஐரோப்பா, இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஆப்பிள் பே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முறையை முழுமையாக மாற்றும், மேலும் அதன் பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

[மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 7 இன்ச் டேப்ளெட் ரூ.6,999]

தற்சமயம் ஆப்பிள் பே அமெரிக்காவில் ஐபோன் 6, ஐபோன் 6ப்ளஸ், ஐபேட் ஏர் 2 மற்றும் ஐபேட் மினி 3 மாடல்களில் மட்டும் இருக்கின்றது. ஐபோன் 5எஸ், 5 மற்றும் 5சி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆப்பிள் பே பயன்படுத்த முடியும். க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆப்பிள் பே கண்டறியப்பட்டுள்ளது, இது என்எப்சி சார்ந்த வயர்லெஸ் கருவிகளின் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple Pay coming to India. It seems that Apple Pay will be coming to India soon, reports suggest.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்