என்னது ஆன்டிராய்டை கூகுள் கண்டுபிடிக்கவில்லையா

By Meganathan
|

உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் மொபைல் இயங்குதளம் தான் ஆன்டிராய்டு, இது எங்களுக்கு தெரியாதா என்று கேட்கின்றீர்களா. உங்களுக்கு ஆன்டிராய்டு பற்றி என்ன தெரியும், எல்லாமே தெரியும் என்று நினைப்பவர்களுக்கானது தான் இது.

இங்கு ஆன்டிராய்டு குறித்து பலரும் அறிந்திராத சில விஷயங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். கீழே வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு குறித்து பெரும்பாலானோருக்கு தெரிந்திராத சில விஷயங்களை பாருங்கள்..

கூகுள்

கூகுள்

ஆன்டிராய்டு இயங்குதளத்தினை கூகுள் நிறுவனம் கண்டறியவில்லை, ஆன்டிராய்டு இயங்குதளத்தை கண்டறிந்தது ஆன்டிராயாடு இன்க் நிறுவனத்தின் கீழ் ஆன்டி ரூபின், க்ரிஸ் வைட், நிக் சியர்ஸ் மற்றும் ரிச் மைனர் ஆகியோர் கண்டறிந்தனர், ஆன்டிராய்டு இன்க் 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 2005 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டை 50 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

கூகுள் 2007

கூகுள் 2007

கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டு இயங்குதளத்தை நவம்பர் மாதம் 2007 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த இயங்குதளமானது கேமராக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அதன் பின் கூகுள் நிறுவனம் இதனை ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டது.

டிஜிட்டல் கேமரா

டிஜிட்டல் கேமரா

ஆரம்பத்தில் ஆன்டிராய்டு இயங்குதளம் டிஜிட்டல் கேமராக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அதன் பின் கூகுள் ஆன்டிராய்டின் கவனத்தை ஸ்மார்ட்போன்களின் பக்கம் செலுத்தியது. இதையடுத்து கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டு இயங்குதளத்தினை ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது.

ஹெச்டிசி ட்ரீம்

ஹெச்டிசி ட்ரீம்

ஆன்டிராய்டு இயங்குதளம் மூலம் வெளியான முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹெச்டிசி ட்ரீம் பெற்றது. ஹெச்டிசி ட்ரீம் அக்டோபர் மாதம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. இந்த கருவி லைனக்ஸ் மூலம் இயங்கிய ஆன்டிராய்டு இயங்குதளத்தை கொண்டிருந்தது. இது ஆன்டிராய்டு 1.0 வெர்ஷன் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பில்லியன்

பில்லியன்

ஆன்டிராய்டிற்கான கூகுள் துணை தலைவர் சுந்தர் பிச்சை ஆன்டிராய்டு இயங்குதளத்தினை 190 நாடுகளில் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

பெயர்

பெயர்

ஆன்டிராய்டு 1.0 மற்றும் 1.1 இயங்குதளங்களை தவிற மற்றவைகளுக்கு இனிப்பான பெயர்களை சூட்டியிருக்கின்றது கூகுள் நிறுவனம்.

ஆன்டிராய்டு 1.5 கப்கேக், ஆன்டிராய்டு 1.6 டோநட், ஆன்டிராய்டு 2.0 எக்ளெய்ர், ஆன்டிராய்டு 2.1 எக்ளெய்ர், ஆன்டிராய்டு 2.2 ஃப்ரோயோ, ஆன்டிராய்டு 2.3 ஜிங்கர்பிரட், ஆன்டிராய்டு 3.0 ஹனிகாம்ப், ஆன்டிராய்டு 3.1 ஹனிகாம்ப், ஆன்டிராய்டு 3.2 ஹனிகாம்ப், ஆன்டிராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விச், ஆன்டிராய்டு 4.1 ஜெல்லி பீன், ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன், ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன், ஆன்டிராய்டு 4.4 கிட்காட், ஆன்டிராய்டு 5.0 லாலிபாப், ஆன்டிராய்டு 5.1 லாலிபாப்.

பெயர் காரணம்

பெயர் காரணம்

ஆன்டிராய்டு இயங்குதளங்கள் ஆங்கில வார்த்தைகளை வரிசையில் குறிக்கும் படி பெயர் சூட்டியிருக்கின்றது, அவைகளை இங்கு பாருங்கள்.

A for Astro (1.0), B for Bender (1.1), C for Cupcake (1.5), D for Donut (1.6), E for Eclair (2.0), F for Froyo (2.2.x), G for Gingerbread (2.3.x), H for Honeycomb (3.x), I for Ice Cream Sandwich ,4.0.x), J for Jelly Bean (4.3), K for KitKat (4.4), L for Lollipop (5.0)

சந்தை

சந்தை

ஓபன் ஹான்டு அல்லையன்ஸில் உறுப்பினராக கூகுள் திகழ்வதால் ஆன்டிராய்டின் சோர்ஸ் கோடுகளை மாற்றியமைக்கும் உரிமம் அதன் பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இலவசம்

இலவசம்

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டு இயங்குதளத்தினை இலவசமாக வழங்கி வருகின்றது.

லாபம்

லாபம்

ஆன்டிராய்டு இயங்குதளத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் உலகின் முன்னணி நிறுவனமாக உயர முடியும் என்பதோடு இதன் மூலம் வியாபரங்களை அதிகளவில் செய்து அதன் மூலம் லாபம் ஈட்ட முடியும்.

Best Mobiles in India

English summary
Amazing Facts You Didn't Know About Android. Check out here Amazing Facts You Didn't Know About Android. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X