கோடீஸ்வரர்கள் பட்டியலில் 400 ப்ளிப்கார்ட் ஊழியர்கள்

By Meganathan
|

ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பங்ககளை வைத்திருக்கும் 400 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் நான்கில் ஒருவர் அந்நிறுவன பங்குகளை வைத்திருப்பதாகவும் வெய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களில் பலர் வேறு நிறுவனங்களில் சிறிய பொருப்புகளில் பணிபுரிந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

400 ப்ளிப்கார்ட் ஊழியர்கள் கோடீஸ்வரர்கள்

பெரிய பொருப்புகளை வகிக்கும் 20 ஊழியர்கள் தற்ப்போதய பங்குகளின் மதிப்பு 6 கோடியாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ப்ளிப்கார்ட்டின் மதிப்பு 2012 ஆம் ஆண்டு 850 மில்லியன் டாலர்களாக இருந்து. இரு ஆண்டுகளில் இந்த மதிப்பு 8 மடங்கு அதிகரித்தது. ஊழியர்களுக்கு ஊதியத்தை விட வளர்ச்சியை அளிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைய வருமானங்களை கொடுப்பதில் ஐ.டி துறையை அடுத்து மின் வணிகம் சார்ந்த நிறுவனங்களே ஊழியர்களுக்கு நல்ல லாபத்தை அளித்து வருகின்றது என்கிறார் லாங் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்.

400 ப்ளிப்கார்ட் ஊழியர்கள் கோடீஸ்வரர்கள்

மே மாதம் மின்த்ரா நிறுவனத்தை கையகப்படுத்திய ப்ளிப்கார்ட் நிறுவனம், தன் ஊழியர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தங்கள் பங்குகளை விற்பனை செய்யவும் உத்தரவிட்டது, இதை உறுதி படுத்த ப்ளிப்கார்ட் மறுத்து விட்டது. இது குறித்து அதன் ஊழியர்கள் தெரிவிக்கும் போது ப்ளிப்கார்ட் நிறுவனம் ஊழியரகளின் உழைப்புக்கு மதிப்பளிக்கின்றது, என்றார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Major number Employees of Flipkart have become Crorepati's in Ten Years

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X