எச்டிசி ரேடார், ரைம் ஸ்மார்ட்போன்கள் ஓர் அலசல் ஒப்பீடு

எச்டிசி ரேடார், ரைம் ஸ்மார்ட்போன்கள் ஓர் அலசல் ஒப்பீடு

சர்வதேச சந்தையில் 2 ஸ்மார்ட் மொபைல்களை அறிமும் செய்யதிருக்கிறது எச்டிசி நிறுவனம்.

இந்த இரண்டு மொபைல்களுமே அற்புதமான வசதிகளை கொண்டிருக்கிறது.

எச்டிசி ரேடார் மொபைல் 3.8 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். எச்டிசி ரைம் மொபைல் 3.7 இஞ்ச் திரையை கொண்டுள்ளது.

ரைம் மொபைல் 130 கிராம் எடையை கொண்டதாக இருக்கிறது. ஆனால் எச்டிசி ரேடார் மொபைல் 137 கிராம் எடையை கொண்டது.

ரைம் மொபைலைவிட, ரேடர் மொபைல் சற்று அதிக எடையை கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மிக முக்கியமாக கேட்டு தெரிந்து கொள்வது பொதுவாக கேமரா வசதியை தான்.

இந்த இரண்டு மொபைல்களிலும் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இதனால் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை எளிதாக பெறலாம். அதோடு ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் டிஜிட்டல் சூம் போன்ற வசதிகளையும் பெறலாம்.

ஆனால் இதில் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று கூறலாம். எச்டிசி ரேடார் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

எச்டிசி ரைம் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

எச்டிசி ரேடார் மொபைலில் 8ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எச்டிசி ரைம் மொபைலில் 4ஜிபி வரைதான் இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

எச்டிசி ரேடார் மொபைல் 1,520 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியையும், எச்டிசி ரைம் மொபைல் 1,600 எம்ஏஎச் பேட்டடரியையும் வழங்குகிறது.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த இரண்டு  மொபைல்களின்

விலைகளும் இன்னும் வெளியிடப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்