இன்று வெளியான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்....

Written By:

தாய்லாந்தில் நடைபெற்று வரும் சாம்சங் ஃபோரம் 2015 விழாவில், அந்நிறுவனம் புதிய வகை ஸ்மாரட்போன்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ7 இந்தியாவில் ரூ. 30,499 விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.3 எம்எம் மெலிதாக இருக்கின்றது.

அதே போன்று இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஜெ1, சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம், சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம், கேலக்ஸி டேப் ஆக்டிவ் போன்ற கருவிகளையும் இவ்விழாவில் வெளியிட்டது.

சாம்சங் கேலக்ஸி ஜெ1 ஸ்மார்ட்போன் 4.3 இன்ச் PLS TFT டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 768 எம்பி ராம் கொண்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி ஜெ1, 4.3 இன்ச் PLS TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 768 எம்பி ராம் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ்

மெமரியை பொருத்த வரை 4 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

கேமரா

5 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

மென்பொருள்

கேலக்ஸி ஜெ1 ஆன்டிராய்டு 4.4 கிட்காட் கொண்டுள்ளது

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் எப்எம் ரேடியோ ஆகியவை இருக்கின்றது.

பேட்டரி

1850 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சாம்சங் கேலக்ஸி ஜெ1 சக்தியூட்டப்படுகின்றது.

கேலக்ஸி ஏ7 டிஸ்ப்ளே

கேலக்ஸி ஏ7, 5.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

பிராசஸர்

கேலக்ஸி ஏ7 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ராம் கொண்டுள்ள்து.

கேமரா

கேமராவை பொருத்த வரை கேலக்ஸி ஏ7, 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Samsung Launched Galaxy series smartphones.Samsung on Monday launched the Galaxy series smartphones at its Samsung Forum 2015 in Bangkok, Thailand.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்