Home
Mobile

ஸ்டைலுக்கான இலக்கணத்துடன் புதிய ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகம்

By Super

ஸ்டைலுக்கான இலக்கணத்துடன் புதிய ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகம்
மொபைல் சாம்ராஜ்யத்தில் புதுமைகளை புகுத்தி வரும் எல்ஜி நிறுவனம் பிரடா என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வடிவமைப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

ஸ்டைலான தோற்றத்திற்கு ஓர் புதிய இலக்கணத்தை கொண்டு வந்திருக்கிறது எல்ஜி பிரடா 3.0 ஸ்மார்ட்போன். இந்த பிரடா வரிசையில் வெளியான ஸ்மார்ட்போன்களை ஒரு சிறப்பு கண்ணோட்டமாக பார்க்கலாம்.

எல்ஜி நிறுவனம் பிரடா வரிசையில் 2007-ஆம் ஆண்டில் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அந்த புதிய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்து பிரடா-2 கேஎப்சி-900 என்றதோர் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கி வெற்றியும் கண்டது எல்ஜி நிறுவனம்.

அந்த வரிசையில் தற்போது அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய எல்ஜி பிரடா ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதி கொண்டது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் 2.3 ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். அடுத்த

ஆண்டில் இதற்கு ஐஸ் கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் வசதியும் வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் தென்-ஐரோப்பா, தென்-கொரியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் எல்ஜி பிராடா 3.0 வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எல்ஜி பிராடே 3.0 ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களை அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X