புதிய ஐபோனுக்கு சலுகையுடன் ஏர்டெல் வழங்கும் சிறப்பு மாதாந்திர திட்டங்கள்!

ஆப்பிள் ஐபோன் 4 எஸ் ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் தனியாக ஜிஎஸ்எம் சிம் கார்டையும் மற்றும் போனில் இன்பில்ட்டாக இருக்கும் சிடிஎம்ஏ சிம் கார்டு பொருத்தப்பட்ட மாடலையும் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.
மேலும், குறைந்தப்பட்சம் ரூ.300 முதல் ரூ.2,000 வரையில் மாதாந்திர கட்டண திட்டங்களை தேர்வு செய்துகொள்ளலாம். இதில், ரூ.300 கட்டணம் கொண்ட குறைந்தபட்ச மாதாந்திர கட்டண திட்டத்தில்
வாடிக்கையாளர்கள் 500 நிமிடங்கள் வரை உள்ளூர் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 200 எம்பி தகவல் பரிமாற்ற சேவையை இலவசமாக பெறலாம்.
இந்த குறைந்தபட்ச கட்டணத் திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளில் ரூ.7,200 வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.இதுவே ரூ.1,000 கட்டண திட்டத்தில், 1,500 லோக்கல் கால், 600 எஸ்எம்எஸ், 3ஜிபி தகவல்
பரிமாற்றத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். சலுகையுடன் இத்திட்டத்தின் மூலமாக இரண்டு வருடத்தில் ரூ.24,000 பணத்தை மிச்சப்படுத்தலாம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
16ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைலை ரூ.44,000 விலைக்கும், 32ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைலை ரூ.50,000 விலைக்கும், 64ஜிபி கொண்ட ஆப்பிள் மொபைலை ரூ.57,500 விலைக்கும் பெறலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








