புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்: எச்டிசி அறிமுகம்

கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் வகையில் வெறும் 137 கிராம் கொண்ட மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர் மற்றும் ஆட்ரினோ 205 ஜிபியு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் எளிதாக இயங்க உதவுகிறது.
எச்டிசி ரேடார் மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமரா வசதி கொண்டது. எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும் அத்தனைப் புகைப்படங்களையும் துல்லியத்துடன் கொடுக்கும். இந்த கேமரா ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் லெட் ஃபலாஷ் வசதி கொண்டது. சிறப்பான வீடியோ ரிக்கார்டிங் வசதியினையும் இதன் மூலம் பெற முடியும்.
இதில் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஸ்லாட் இல்லை. ஆனால் 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி உள்ளது. எச்டிசி மொபைலில் ஸ்டான்டர்டு லித்தியம் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்படுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் மொபைல் 2ஜி வசதிக்கு 5 மணி நேரம் 30 நிமிடம் டாக் டாம் வசதியையும் மற்றும் 7 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியையும் வழங்குகிறது. அதோடு புளூடூத் மற்றும் வைபை சவுகரியத்தையும் கொடுக்கிறது. எச்டிசி ரேடார் மொபைல் இந்திய சந்தையில் ரூ.23,500 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








