தேர்தலில் 'பதவிக்கு' போட்டி போடும் அரசியல்வாதிகளே, கொஞ்சம் கவனிங்க..!!

Written By:

2000 பேரு ஒன்னா கூடி.. "தலிவர் வாழ்க..!", "தலைவி வாழ்க வாழ்க..!!" என்று கோஷம் போட்டுவிட்டால் மட்டும் ஒருவருக்கு தலைமை பண்பு வந்து விடாது, அவர்கள் 'தலைவர்' என்றாகிவிட இயலாது.

தலைமை என்பதும் தலைவன்/தலைவி என்பதும் நாம் எண்ணும் அளவிற்கு சாதரணமான விடயமில்லை. ஒரு சிறந்த தலைமை உருவாக 10 தகுதிகள் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் - நேர்மை, பிரதிநிதித்துவம், பேசும் திறன், நம்பிக்கை, அர்ப்பணிப்பு, நல்ல எண்ணங்கள், படைப்பாற்றல், ஊக்கம், அணுகுமுறை..!!

இப்பெரும் 10 பண்புகள் தான் ஒருவரை சிறந்த தலைவராக உருவாக்க முடியும். சில சமயம் இப்பெரும் பண்புகளை சில அற்புதமான சினிமாக்கள் நமக்கு கற்றுக்கொடுத்து விடும். அப்படியாக ஒவ்வொரு தலைவனும் பார்த்து எழுச்சியடையக்கூடிய 10 திரைப்படங்களைத் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#10 பாய்லர் ரூம் :

கல்லூரிப் படிப்பை நிறுத்தியவருக்கு வேலை முதலீட்டு நிறுவனம் ஒன்றில் ப்ரோக்கர் வேலை கிடைத்து பின் அவர் பெரிய அளவிலான வெற்றிகளை அடைந்த பின்பு ஊழல் மற்றும் பேராசை உலகிற்குள் எப்படி பயணிக்கிறார் என்பதை பற்றிய கதை..!

#09 ஆபிஸ் ஸ்பேஸ் :

நன்றிகெட்ட தங்களின் நிறுவனங்களில் இருந்து வெளியேறி பின் தாங்கள் வெறுக்கும் நிறுவனங்களை ஏமாற்றி சம்பாதிக்கும் நண்பர்கள் பற்றிய கதை..!

#08 ராக்கி :

ஒரு சிறிய நேர குத்துச்சண்டை வீரர் மிகவும் சவாலான ஹெவிவெயிட் சாம்பியன் போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெரும் கதை..!

#07 மணிபால் :

பழைய பள்ளி விளையாட்டு வீரர்கள் தேர்வு முறைகளை எதிர்க்கும் இருவரின் கதை..!

#06 தி பர்ஸ்யூட் ஆப் ஹாப்பினஸ் :

தன் ஒட்டுமொத்த சேமிப்பையும் தனது கண்டுபிடிப்பிற்காக செலவு செய்துவிட்டு பின் வாழ்வாதாரம் தேடிப்போராடும் மனைவியை பிரிந்து மகனோடு இருக்கும் ஒரு தந்தையின் கதை..!

#05 ஸ்டீவ் ஜாப்ஸ் :

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் வாழ்க்கையை மையாக கொண்டு உருவாகிய திரைப்படம்..!

#04 தி காட்பாதர் :

தன் மாபியா கும்பலை நிர்வகிக்கும் பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைக்கும் தந்தை பின் மகன் சந்திக்கும் உயிர்போராட்ட பிரச்சனைகள் சார்ந்த கதைக்களம் கொண்டது இத்திரைபப்டம்..!

#03 அப் இன் தி எர் :

ரியான் என்ற ஒரு கார்ப்பரேட் ஆட்குறைப்பு நிபுணர் மற்றும் அவருடன் அலுவலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புதிதாக பணியில் அமர்ந்த ஒருவர் ஆகியவர்களுக்குள் ஏற்படும் நட்பை அடித்தளமாய் கொண்ட திரைப்படம்..!

#02 அக்டோபர் ஸ்கை :

அமெரிக்காவின் முதல் ராக்கெட் பொறியாளர்கள் பற்றிய உண்மை கதை..!

#01 சோசியல் நெட்வர்க் :

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க்கின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
10 Inspiring Movies Every Leader Must Watch. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்