வாட்ஸ்ஆப் புதிய அம்சம் : செட்அப் செய்வது எப்படி??

Written By:

வாட்ஸ்ஆப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக விளங்கும் வாட்ஸ்ஆப் இலவசமாக கிடைப்பதோடு எண்ணற்ற சேவைகளை வழங்கி வருவதை இதற்கு முக்கிய காரணமாக கூற முடியும்.

சமீபத்தில் இந்நிறுவனம் எழுத்துக்களை அழகாக்க சில அம்சங்களை வழங்கியுள்ளது. இவை கணினிகளில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் அம்சம் தான் என்றாலும், மொபைல் போன்களில் இந்த அம்சம் புதியது ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

பொதுவாக கணினிகளில் டெக்ஸ் ஃபார்மேட்டிங் என அழைக்கப்படும் சில அத்தியாவசிய அம்சங்களை தான் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் வழங்கியுள்ளது.

02

வாட்ஸ்ஆப் செயலியில் டைப் செய்த எழுத்துக்களின் மேல் கோடு போட வார்த்தைகளின் முன்னும் பின்னும் ~ பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ~வணக்கம்~ என டைப் செய்தால் வணக்கம் என்ற வார்த்தையின் மேல் கோடு விழும்.

03

குறிப்பிட்ட வார்த்தையை போல்டு அதாவது எடுத்துக்காட்ட செய்ய வார்த்தைக்கு முன்னும் பின்னும் * பயன்படுத்தினால் போதும்.

04

அன்டர்லைன் எனப்படும் வார்த்தையின் கீழ் கோடு இட _ என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் குறிப்பிட்ட வார்த்தை சற்றே சாய்ந்த நிலையில் இட்டாலிக் போன்று மாறி விடும்.

05

இந்த அம்சங்களை பயன்படுத்த புதிய வாட்ஸ்ஆப் பதிப்பினை அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். புதிய அப்டேட்களில் இந்த அம்சம் தற்சமயம் அனைவரும் பயன்படுத்த முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to bold, italicize, and strikethrough text in WhatsApp Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்