உங்க கற்பனையை ஊக்குவிக்கும் இலவச விண்டோஸ் செயலிகள்

|

சிறு வயதில் நம் கிரியேட்டிவிட்டியை சரியாக பயன்படுத்த எம்.எஸ். பெயிண்ட், பவர்பாயிண்ட் போன்ற செயலிகள் நம் கணினியில் கிடைத்தது. எனினும் அந்த காலத்தில் இதுபோன்ற செயலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.

உங்க கற்பனையை ஊக்குவிக்கும் இலவச விண்டோஸ் செயலிகள்

ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் கிரியேட்டிவிட்டியை எக்கச்சக்கமாக எகிற செய்ய ஏராளமான ஆப்ஸ் கிடைக்கிறது. இவற்றில் விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும் டாப் 5 செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.

ஃப்ரெஷ் பெயிண்ட்:

ஃப்ரெஷ் பெயிண்ட்:

உங்களது பெயிண்டிங் திறனை ஊக்குவிக்க சிறந்த செயலியாக மைக்ரோசாப்டின் ஃப்ரெஷ் பெயிண்ட் இருக்கிறது. இந்த செயலி முழு வழிமுறையிலும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதால், இறுதி பதிப்பு மிகவும் கச்சிதமான ஒன்றாக காட்சியளிக்கும்.

துவக்கத்தில் பென்சில், பென் அல்லது பெயிண்ட் ஆயில் உள்ளிட்ட டூல்களை கொண்டு ஆரம்பித்து, வரைந்த படத்தை JPG அல்லது PNG போன்ற பதிப்புகளில் சேமிக்க முடியும். இத்துடன் வரைந்த படத்தை மற்ற செயலிகளிலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஆட்டோடெஸ்க் ஸ்கெட்ச்புக்:

ஆட்டோடெஸ்க் ஸ்கெட்ச்புக்:

இது கிராஃபிக் டிசைனர் மற்றும் வரைகலை நிபுணர்களுக்கான செயலி ஆகும். அதிநவீன வசதிகளை வழங்கும் டூல்கள் கிராஃபிக் டிசைனர்களின் கற்பனைக்கு ஈடு கொடுக்கும். இத்துடன் வாடிக்கையாளர்கள் ஆர்ட் டூல், டெம்ப்ளேட், டூல்ஸ் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை ப்ரோ சந்தா செலுத்தி பெற முடியும்.

பெயிண்ட் 3D:

பெயிண்ட் 3D:

பேனாவை கொண்டு எவ்வித 2D பரப்பிலும் 3D படங்களை வரைய இந்த செயலி வழி செய்யும். 3D படங்களை வரைவதோடு அதிகப்படியான ஸ்டிக்கர்களையும் இதில் பயன்படுத்தி அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஜர்ணலிஸ்ட்:

ஜர்ணலிஸ்ட்:

இந்த செயலி ஃப்ரீ-ஃபார்ம் கான்வால் வசதிகளை வழங்குகிறது. இதில் வித்தியாச பேப்பர்கள், ரூலர் மற்றும் எக்கச்சக்கமான வடிவங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இது சர்ஃபேஸ் டயலுடன் இணைந்து வேலை செய்யும் என்பதால் வெவ்வேறு நிறங்களில் உங்களது கிரியேட்டிவிட்டியை வெளிப்படுத்தலாம்.

சென்:

சென்:

சிறுவயதில் நாம் நிறங்களால் நிரப்பிய கலரிங் புத்தம் தான் இந்த செயலி. வெவ்வேறு வகையான படங்களை நிறமில்லாமல் வழங்கும் சென் செயலியில் நம் விருப்பத்திற்கு ஏற்ற நிறங்களால் நிரப்பி மகிழ முடியும்.

இதில் கிடைக்கும் ஏராளமான வரைபடங்கள் உங்களுக்குள் இருக்கும் கற்பனையை வெளிப்படுத்த தலைசிறந்த செயலியாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Since childhood, we have been or at least trying to be creative using some apps like MS Paint, Powerpoint in our computer. At that time, the software that stimulates our creativity is so limited to one or two.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X