வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் நீங்கள் அறியாத ஐந்து சிறப்பு அம்சங்கள் என்ன?

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் டைம், கூகுள் நிறுவனத்தின் டுயோ, ஸ்கைப் ஆகிய வீடியோ காலிங் வசதிகளுக்கு பெரும் போட்டி கொடுக்கும் வகையில் வாட்ஸ் தனது பயனாளிகளுக்கு வீடியோ அழைப்பு வசதியை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் நீங்கள் அறியாத ஐந்து சிறப்பு அம்சங்கள்

ஐபோன் வாங்க ரூ.23,000 சலுகை தராங்க பாஸ்..

எனவே மற்ற வீடியோ அழைப்பு சேவை தரும் நிறுவனங்களுக்கு கடும்போட்டியை கொடுத்துள்ள இந்த வாட்ஸ் அப் வீடியோ சேவையில் ஒருசில சிறப்பு அம்சங்கள் பலர் அறியாதவை. அந்த சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் உள்ள முதல் சிறப்பு அம்சம்

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் உள்ள முதல் சிறப்பு அம்சம்

பொதுவாக வாட்ஸ் அப்-இன் சிறப்பு அம்சமே இதில் உள்ள சேட்டிங்கை நீங்களும் உங்களுடன் சேட்டிங் செய்பவரை தவிர வேறு யாருக்கும் சேட்டிங் விஷயம் தெரிய வாய்ப்பில்லை என்பதுதான். இதே முறை வீடியோ காலிங் முறையிலும் உள்ளது. நீங்களும் உங்கள் நண்பரும் வீடியோவில் பேசுவது வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு எந்த இடையூறுகளும் இல்லை

வேறு எந்த இடையூறுகளும் இல்லை

ஒரே நேரத்தில் ஒரு நம்பருடன் மட்டுமே வீடியோ அழைப்பு பேசுவதால் வேறு எந்தவித அழைப்பின் இடையூறு இன்றி நிம்மதியாக வீடியோவில் நம்முடைய அன்புக்குரியவரின் முகத்தை பார்த்து பேசலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெதுவான இண்டர்நெட்டிலும் வேலை செய்யும்?

மெதுவான இண்டர்நெட்டிலும் வேலை செய்யும்?

பொதுவாக வீடியோ அழைப்புக்கு வேகமான இண்டர்நெட் வசதி தேவை. ஆனால் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பிற்கு மெதுவான இண்டர்நெட் அழைப்பு இருந்தால் போதுமானது. இந்தியாவில் இன்னும் மிக பெரும்பான்மையானோர் 2ஜி இண்டர்நெட் கனெக்ஷன் மட்டுமே வைத்துள்ளதால் அவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

வேறு ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை

வேறு ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை

ஏற்கனவே சுமார் 160 மில்லியன் இந்திய வாட்ஸ் அப் பயனாளிகள் அனுபவித்து வரும் இந்த வாட்ஸ் அப் வீடியோ சேவைக்கு வேறு எந்தவிதமான ஆப்ஸ்களும் தேவை இல்லை. வாட்ஸ் அப்-இல் ஏற்கனவே உள்ள வசதிகளே இந்த வீடியோ அழைப்பு சேவைக்கு போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் செயல்படும்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் செயல்படும்

ஃபேஸ்டைம் ஆப் போல இல்லாமல் இந்த வாட்ஸ் அப் வீடியோ சேவை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலும் செயல்படும் என்பதால் உங்களிடம் எந்த மாதிரியான போன் உள்ளது என்பது குறித்து சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
WhatsApp finally adds support for video calling to its messaging app. Here are 6 advantages of using the video calling feature.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X