Tap to Read ➤

இனி இருந்த இடத்திலேயே இதை செய்யலாம்: Netflix

Netflix பயனர்கள் தங்கள் கணக்கை பயன்படுத்தும் அனைவரையும் உங்கள் சாதனத்தின் மூலமாகவே அகற்றலாம்.
manju s
பிரபல ஓடிடி பயன்பாடாக இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் இல் புதிய அம்சம் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய நிர்வாக அணுகல் விருப்பத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இனி உங்கள் கணக்கு உங்கள் உரிமை என்று நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் செயல்படலாம்.
இனி பயனர்கள் தங்கள் கணக்கின் உள்நுழைவு நிலையை சரிபார்க்கலாம்.
பிற சாதனத்தில் லாக் இன் செய்து லாக் அவுட் செய்ய தவறினால் இனி உங்கள் சாதனம் மூலமாகவே லாக் அவுட் செய்யலாம்.
எடுத்துக்காட்டாக (லாக் அவுட் செய்யாமலயே ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்திருக்கலாம்).
உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பிறரிடம் பகிர்ந்து மறந்திருக்கலாம்.
இதுபோன்று உங்கள் கணக்கு லாக்இன் செய்யப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும் இனி நீங்களே நீக்கலாம்.
உங்கள் கணக்கு பிரிவில் இருக்கும் "அணுகல் மற்றும் சாதனங்கள் நிர்வகித்தல்" என்ற விருப்பத்தில் இதை மேற்கொள்ளலாம்.