Tap to Read ➤

86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்

86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை?
manju s
சியோமி நிறுவனம் சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் (Xiaomi TV ES Pro 86-Inch)மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது
வரும் மே 31-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடல் ஆனது ஐபிஎஸ் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது
4கே ரெசல்யூசன், 3,840x2,160 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
இந்த சியோமி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி விஷனை ஆதரிக்கிறது
குவாட்-கோர் கார்டெக்ஸ்-ஏ73 சிபியு, மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு ஆதரவு போன்ற அட்டகாசமான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய 86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவியில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடலில் மொத்தம் எட்டு ஸ்பீக்கர் யூனிட்கள் உள்ளன.
சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடலின் விலை CNY 8,499(இந்திய மதிப்பில் ரூ.98,900) ஆக உள்ளது.