Tap to Read ➤

50எம்பி கேமராவுடன் அறிமுகமான Xiaomi ஸ்மார்ட் கிளாஸ்

50எம்பி கேமராவுடன் அறிமுகமான Xiaomi ஸ்மார்ட் கிளாஸ்: என்ன விலை?
manju s
கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் ஸ்மார்ட் கிளாஸ் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்திருந்தது.
தற்போது கேமரா, டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி.
தற்போது இந்த மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த ஸ்மார்ட் கண்ணாடி அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் ஆனது இண்டெலிஜண்ட் இமேஜ் & ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் கிளாஸ் ஆனது சோனி மைக்ரோ ஒஎல்இடி சிலிகான் சார்ந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
ஆண்டி-புளூ லைட் சான்று, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது மிஜியா ஸ்மார்ட் கிளாஸ்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடி 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி டெலிபோட்டோ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது
மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் ஆனது 1020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் விலை CNY 2499 (இந்திய மதிப்பில் ரூ.29,275) ஆக உள்ளது.