Tap to Read ➤

போன் வெடித்து உயிரிழந்த பெண்

போன் வெடித்து உயிரிழந்த பெண்? என்ன சொல்லப் போகிறது Xiaomi.!
manju s
கம்மி விலையில் போன்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று அவசரப்பட்டு தரம் இல்லாத போன்களை எப்போதும் வாங்கக் கூடாது.
இந்நிலையில் டெல்லி என்சிஆர் பகுதியில் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 6ஏ எனும் போன் வெடித்து ஒரு பெண் இறந்ததாகக் கூறப்படுகிறது.
பிரபல யூடியூபர் ஒருவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியாக உள்ளது.
இந்த யூடியூபரின் அத்தை இரவு தூங்கும் போது ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனை தலையணைக்கு அருகில் முகத்திற்கு நேராக வைத்திருந்தார் எனவும்,
அந்த போன் வெடித்து அவரது உயிரைப் பறித்ததாகக் கூறப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
இது எங்களுக்கு மோசமான நேரம். இந்த நேரத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பிராண்டின் பொறுப்பு என்று அந்த யூடியூபர் தெரிவித்து இருக்கிறார்.
ட்விட்டரில் வெளியாகி இருக்கும் படங்களில் உயிரிழந்த பெண் படுத்திருந்த பகுதி முழுக்க இரத்தத்தை காண முடிகிறது.
போன் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து சியோமி நிறுவனம் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது.
உயிரிழப்பு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் சியோமி நிறுவனம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை செய்ய உள்ளதாக தகவல்.