Tap to Read ➤

'இந்த' ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் கிடைக்காது எனத் தகவல்

இனிமேல் 'இந்த' ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் கிடைக்காது எனத் தகவல்
manju s
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது.
அதேபோல் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
வாட்ஸ்அப் ஆதரவை சில ஐபோன் மாடல்களுக்கு நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஐஒஎஸ் 11 (ios 11) இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் எனத் தகவல்
அதுவும் வரும் அக்டோபர் 24-ம் தேதி இதன் காலக்கொடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே அக்டோபர் 24-ம் தேதிக்கு பிறகு இந்த இயங்குதளங்கள் கொண்டு இயங்கும் ஆப்பிள் ஐபோன்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.
ஐபோன் 5, ஐபோன் 5சி போன்ற மாடல்களுக்கு இதுவரை ஐஒஎஸ் 12 (ios 12) இயங்குதள அப்டேட் கிடைக்கவில்லை.
எனவே இந்த ஐபோன் மாடல்கள் சிக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐபோன் 5 சீரிஸ் மாடல்களை இப்போதும் கூட அதிக பயனர்கள்உபயோகித்து வருகின்றனர்
பழைய இயங்குதளங்களுக்கு ஒன்றியதாக வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டுகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.