Tap to Read ➤

வாட்ஸ்அப் விரைவில் 2ஜிபி அளவு பைல்களை பகிர அனுமதிக்குமா? எப்படி?

வாட்ஸ்அப் விரைவில் 2ஜிபி அளவு பைல்களை பகிர அனுமதிக்கும்.
WABetaInfo வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பீட்டா வெர்ஷனில் ஒரு புத்தம் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது.
இந்த புத்தம் புதிய அம்சம் வாட்ஸ்அப் பயனர்களை 2ஜிபி அளவிலான பைல்களை மெசேஜ் மூலம் பகிர அனுமதிக்கிறது.
வாட்ஸ்அப் இப்போது வரை அதன் பயனர்களுக்கு வெறும் 100 MB அளவிலான பைல்களை மட்டுமே பகிர அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சில பீட்டா சோதனையாளர்களின் வாட்ஸ்அப் இல் இந்த அம்சம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் புதுப்பிப்பு பீட்டா பதிப்புகள் 2.22.8.5 இல் இந்த அம்சம் காணப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் இன் போட்டியாளரான டெலெக்ராம் அதன் தளத்தில் இப்போது வரை 1.5GB அளவு பைல்களை அனுப்ப அனுமதிக்கிறது.
வாட்ஸ்அப் இன் இந்த 2GB பைல் ஷேர் அம்சமத்தின் சோதனை வெற்றிபெற்றால், டெலெக்ராம் செயலியை வாட்ஸ்அப் பின்னுக்கு தள்ளும்.
மெசேஜ்ஜிங் தளத்தில் 2GB அளவு தகவலை பகிரும் வசதியை இப்போது வரை எந்த ஆப்ஸும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் சோதனை செய்யப்படுகிறது.