Tap to Read ➤

உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.!

சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுவோமா?
manju s
ஸ்மார்ட்போனை பொது இடங்களில் சார்ஜ் செய்ய வேண்டாமென்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆம், பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்களில் சார்ஜ் செய்தால், உங்கள் போன் ஹேக் செய்யப்படுமாம்.
குறிப்பாக, டைரக்ட் USB சார்ஜிங் பொருட்களை கண்டால், மக்கள் உஷாராக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது.
USB போர்ட் மூலம் ஹேக்கர்கள் உங்கள் போனில் மால்வேர், வைரஸ்களை இன்ஸ்டால் செய்வார்கள்.
USB சார்ஜிங் மூலம் உங்கள் போனின் முழு தகவலையும் திருடி, உங்களை மோசடி செய்கிறார்கள்.
சார்ஜிங் மூலம் ஏமாற்றும் இந்த வகையான ஹேக்கிங்கை ஜூஸ் ஜாக்கிங் என்று அழைக்கிறார்கள்.
பொது இடங்களில் 3 பாயிண்ட் பிளக் அல்லது பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்வது பாதுகாப்பானது.
USB மூலம் சார்ஜ் செய்யும் போது, டேட்டா எக்ஸ்சேஞ் விருப்பம் Off இல் வையுங்கள்.