Tap to Read ➤

Samsung: ஒரு கல்லுல 2 மாங்கா..

வரும் ஜூலை 14-ஆம் தேதி பட்ஜெட் கிங் சாம்சங்கின் சிறப்பான சம்பவம்.!
manju s
ஒரு கல்லுல 2 மாங்கா என்று கூறுவது போல் ஒரே நேரத்தில் 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங்.
வரும் ஜூலை 14-ம் தேதி கேலக்ஸி எம்13 5ஜி மற்றும் கேலக்ஸி எம்13 4ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங்.
இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூலை 14-ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரிபிள் ரியர் கேமரா, தரமான சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் போன்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எம்13 5ஜி போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 5ஜி சிப்செட் வசதி உள்ளது
கேலக்ஸி எம்13 4ஜி ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்13 4ஜி ஸ்மார்ட்போன்.