Tap to Read ➤

புதிய 5ஜி போனை களமிறக்கும் ஒப்போ

5G ரேசில் இணைந்த ஒப்போ: சத்தமின்றி களமிறங்கும் புதிய போன்: என்னென்ன அம்சங்கள்?
Prakash S
புதிய ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது.
இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் வரும் நவம்பர் 11-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ58 5ஜி ஆனது 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.
ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனில் 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ58 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உள்ளதாக கூறப்படுகிறது.
4880 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் அறிமுகமாகும்.