Tap to Read ➤

லேட்டஸ்ட் 5G சிப்செட் உடன் வரும் iQoo 11 5G போன்

டிசம்பர் 2.. இந்த தேதியை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க! லேட்டஸ்ட் 5G சிப்செட் உடன் ஒரு புது போன் வருது!
Prakash S
விவோ நிறுவனத்தின் துணை பிராண்டு ஐகூ வரும் டிசம்பர் 2-ம் தேதி ஐகூ 11 5ஜி (iQoo 11 5G) எனும் போனை அறிமுகம் செய்ய உள்ளது.
iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும்.
இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் 40 சதவீத அதிக மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறன் கொண்டிருக்கிறது.
iQOO 11 5G ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
iQOO 11 5G ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.