Tap to Read ➤

Infinix Zero 20 போன் அறிமுகம்

வளைச்சு, வளைச்சு போட்டோ எடுக்க 60MP செல்பி கேமரா:Infinix Zero 20 அறிமுகம்: என்ன விலை?
manju s
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 20 எனும் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Infinix Zero 20 போனின் விலை $460 (இந்திய மதிப்பில் ரூ.37,570) என்று கூறப்படுகிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
108எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது Infinix Zero 20.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமரா இவற்றுள் அடக்கம்.
இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹிலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது.
4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் மாடல்.
அதேபோல் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.