Tap to Read ➤

கூகுள் மேப்ல இந்த வீடு மட்டும் ஏன் அப்படி தெரியது

கூகுள் மேப்ல இந்த வீடு மட்டும் ஏன் அப்படி தெரியது: காரணம் என்ன?
manju s
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டை கூகுள் மேப்பில் ப்ளர் (Blur) ஆகி இருப்பது குறித்து பலரும் வைரலாகி பேசிவருகின்றனர்
இந்த மங்கலாக தெரிகிற வீட்டிற்கு சொந்தகாரர் எரியல் காஸ்ட்ரோ என்பவர் தான்
1992-ம் ஆண்டு முதல் இந்த வீட்டில் வசித்துவந்த காஸ்ட்ரோ 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் 3 பெண்களை கடத்தி தனது வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிறார்.
இதன் காரணமாக கைது செய்யப்பட்ட காஸ்ட்ரோவிற்கு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது அமெரிக்க நீதிமன்றம்.
தண்டனை காலத்தின்போது அவருக்கு பரோல் வழங்கப்படாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து ஏரியல் காஸ்ட்ரோ தங்கியிருந்த வீட்டை நகர நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கியது
இருந்தபோதிலும் வீடு இருந்த இடம் கூகுள் மேப்பால் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மங்கலாக தெரிகிறது.
குறிப்பிட்ட இடங்களை இப்படி மறைப்பது கூகுள் மேப்பில் புதிதல்ல.
குற்றப் பின்னணி அல்லது சர்ச்சையான இடங்கள் சில கூகுள் மேப்பில் ஏற்கனவே ப்ளர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.