Tap to Read ➤

ஜியோவை விட அதிக பயன் வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ஆனால்?

ஜியோவை விட அதிக பயன் வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள். ஆனால் ஒரு குறைபாடு.
manju s
BSNL அதன் பயனர்களுக்கு அட்டகாசமான நன்மைகள் கிடைக்கும் 3 திட்டங்களை வைத்துள்ளது.
ஜியோ கூட இப்படிப்பட்ட நன்மைகளை அதன் பயனர்களுக்கு கம்மி விலையில் வழங்கவில்லை.
BSNL வழங்கும் பெஸ்டான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் என்றால் அது STV_429, BSNL Rs.447 மற்றும் STV_WFH_599 திட்டங்களாகும்.
STV_429 திட்டம், தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS, ஈரோஸ் நவ் சந்தா ஆகியவற்றுடன் 81 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது.
BSNL Rs.447 திட்டம், 60 நாள் வேலிடிட்டி உடன் 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS, BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் நன்மையை வழங்குகிறது.
STV_WFH_599 திட்டம், தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS, Zing ஸ்ட்ரீமிங் நன்மையோடு 84 நாள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.
இந்த திட்டம் 00:00 மணி முதல் 05:00 மணிநேரம் வரை அன்லிமிடெட் இலவச டேட்டாவையும் வழங்குகிறது.
BSNL வழங்கும் நன்மைகள் ஜியோவை விட அதிகமாக இருந்தாலும் ஒரு குறைபாடு உள்ளது.
BSNL 4ஜி இல்லாமல் 3ஜி வேகத்தில் செயல்படுகிறது என்பது மட்டுமே ஒரு சிறிய குறையாக இருக்கிறது.