ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
இறுதியாக, ஒன்பிளஸ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் வந்துவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனைப் போலவே, சமீபத்திய ஒன்பிளஸ் நோர்ட் போனும் ஏற்கனவே பலரின் கட்டாயம் வாங்க வேண்டிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அப்படியானவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நாங்கள் உங்களுக்காக சில அற்புதமான செய்திகளை வழங்கவிருக்கிறோம்.
ஒன்பிளஸ் நோர்ட், ஜூலை 15ம் தேதி முதல் IST பிற்பகல் 1.30 மணிக்கு Amazon.in தளத்தில் முன் பதிவிற்குக் கிடைக்கிறது. முன்கூட்டியே ஆர்டர் செய்யும் பயனர்களுக்கு, வியப்பூட்டும் பரிசாக லிமிடெட் எடிஷன் பொருட்கள் அடங்கிய முதல் பரிசுப் பெட்டியை ஒன்பிளஸ் நிறுவனம் வழங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தை முழுமையான கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது பரிசு பெட்டியும் கிடைக்கும். கூடுதல் அப்டேட் தகவல்களுக்கு Amazon.in தளத்தில் உள்ள Notify me ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
ஒன்பிளஸ் நோர்டை முன்கூட்டியே ஆர்டர் செய்வது எப்படி?
1. முதலில் நீங்கள் Amazon.in தளத்திற்குச் செல்லுங்கள்.
2. அமேசான் பக்கத்தில், பயனர்கள் ஒன்பிளஸ் நோர்டை முன்கூட்டியே ஆர்டர் செய்ய ஒருமுறை கட்டணமான ரூ.499-ஐ டெபாசிட் செய்யுங்கள்.
3. முன்கூட்டியே ஆர்டர் செய்யும், முன்பதிவு பயனர்களுக்கு ஒன்பிளஸிடமிருந்து லிமிடெட் எடிஷன் பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டி கிடைக்கும்.
4. ஆகஸ்ட் 31-க்குள் ஒன்பிளஸ் நோர்டை கொள்முதல் செய்யும் முன்பதிவு வாடிக்கையாளர்களுக்கு, இரண்டாவது வியப்பூட்டும் பரிசு பெட்டியும் கிடைக்கும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு, ஒன்பிளஸ் ஃபோரம்ஸ் பக்கத்தின் இடுகையைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் தொடக்கத்திலிருந்து மொபைல் கண்டுபிடிப்புகளில் எப்போதும் முன்னணியில் உள்ளது. மலிவு விலையில் தரமான பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு ஒன்பிளஸ் பெயர் பெற்றது. ஒன்பிளஸ் நிறுவனம் தொழில் விதிமுறை சவால்களை எதிர்கொண்டு, ஒன்பிளஸ் 2 இன் தயாரிப்பு வெளியீட்டை உலகின் முதல் வி.ஆர் நிகழ்வாக முழுமையாக நடத்தியது. ஒன்பிளஸ் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, முதன்முதலில் அதிகாரப்பூர்வ அறிமுகத்துடன் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் அதன் முக்கிய சாதனமாக ஒன்பிளஸ் நோர்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நோர்டுக்கான அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூலை 21, 2020 அன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறும். பயனர்கள் தங்கள் வீடுகளிள் இருந்தே 'விர்ச்சுவல்' வடிவில் வெளியீட்டு நிகழ்வை அனுபவிக்க ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. "நெவர் செட்டில்" என்ற பிராண்ட் மந்திரத்தைத் தொடர்ந்து, நிறுவனம் அதன் பயனர் தளத்திற்கு ஒரு அர்த்தமுள்ள மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்கத் தொழில்நுட்பத்தின் வழக்கமான எல்லைகளைக் கடந்து புதிய சவாலை செய்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் குறிப்பாக இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இன் அப்பர் மிட்-பிரீமியம் (upper mid-premium) ஸ்மார்ட்போன் பிரிவை மேம்படுத்துகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை வாங்கியே ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் கையில் ஒன்பிளஸ் நோர்ட் போனை பிடிப்பதற்கான ஏற்ற தருணம் இதுவாக தான் இருக்கும். சில கூடுதல் வியப்பூட்டும் பரிசுகளுடன் உடனே உங்களுடைய ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தை முன்பதிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications