Home
Tablets

தூக்கி பாக்கெட்ல போடலாம்.. வெறும் 8.8 இன்ச் டிஸ்பிளே.. ஆனால், 7500mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் மினி டேப்லெட் மாடலான சியோமி பேட் மினி (Xiaomi Pad Mini) குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 8.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட பாடியில் 7500mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி அட்மோஸ், டால்பி விஷன், பிடிஏஎப் கேமரா போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட் கொண்ட இந்த சியோமி பேட் மினி மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றதால், இப்போது குளோபல் மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய மார்கெட்டிலும் சியோமி டேப்லெட் மாடல்களுக்கு வரவேற்பு இருப்பதால், ஓரிரு மாதங்களில் இங்கு எதிர்பார்க்கலாம். இதனாலேயே இதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

தூக்கி பாக்கெட்ல போடலாம்.. வெறும் 8.8 இன்ச் டிஸ்பிளே.. ஆனால், 7500mAh!

சியோமி பேட் மினி அம்சங்கள் (Xiaomi Pad Mini Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9400+ 3nm) சிப்செட் கிடைக்கிறது. இதில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் மற்றும் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) வருகிறது.

லேட்டஸ்ட் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) இதில் கிடைக்கிறது. இந்த மினி டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 8.8 இன்ச் (3008 x 1880 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

தூக்கி பாக்கெட்ல போடலாம்.. வெறும் 8.8 இன்ச் டிஸ்பிளே.. ஆனால், 7500mAh!

இதுபோக 372Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1080Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதற்கு பென் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பென் மூலம் இதை டச் செய்தால், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 403 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 700 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. இதுபோக டால்பி விஷன் (Dolby Vision) உள்ளது.

மேலும், எச்டிஆர்10 (HDR10), வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology), ஏஐ இமேஜ் என்ஜின் (AI Image Engine) போன்ற பல்வேறு டிஸ்பிளே டெக்னாலஜிகளை கொண்டிருக்கிறது. இந்த சியோமி பேட் மினி டேப்லெட்டில் 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ரியர் கேமராவில் பிடிஏஎப் போகஸ் (PDAF Focus) கிடைக்கிறது.

4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். போர்ட்ராய்டு (Portrait), டெலிப்ராம்ப்டர் (Teleprompter ), டைனாமிக் ஷாட் (Dynamic Shot) மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற கேமரா பீச்சர்கள் இதில் கிடைக்கின்றன. செல்பீ கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த கேமராக்களில் ஓம்னிவிஷன் சென்சார்கள் கிடைக்கின்றன.

இந்த சியோமி மினி டேப்லெட்டில் 67W ஹைப்பர் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. டைப்-சி ஆடியோ + சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 429 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.38,021) இருக்கிறது. பர்பிள் (Purple) மற்றும் கிரே (Gray) கலர்களில் வெளியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டதால், குறிப்பிட்ட நாடுகளில் விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். விலையில் மாற்றம் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad Mini With 7500mAh Battery 67W Charging Launched Globally Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X