Home
Tablets

சீனாக்காரன் வந்தான் வென்றான்.. 7500mAh பேட்டரி உடன் பாக்கெட் சைஸ் டிசைனில் மினி டேப்லெட்!

பெயர் அளவில் மட்டுமே மினி ஸ்மார்ட்போனாக (Mini Smartphone) இருக்கும்.. திடீரென பூதாகரமாக டிரெண்ட் ஆன காம்பாக்ட் (Compact) ஸ்மார்ட்போன்களின் கதைகளை "முடிச்சு விடும்" படியாக சீன நிறுவனமான ஷாவ்மீ.. உண்மையிலேயே ஒரு பாக்கெட் சைஸ் மினி டேப்லெட்டை (Pocket Size Mini Tablet) உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது.

அது - ஷாவ்மீ பேட் மினி (Xiaomi Pad Mini) டேப்லெட் ஆகும். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி கே பேட் (Redmi K Pad) டேப்லெட் தான் உலகளாவிய வெளியீட்டிற்காக ஷாவ்மீ பேட் மினி ஆக வர உள்ளது.

7500mAh பேட்டரி உடன் பாக்கெட் சைஸ் டிசைனில் மினி டேப்லெட்!

ஷாவ்மீ நிறுவனம் இந்த டேப்லெட்டின் அறிமுக தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இது செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ள ஷாவ்மீ 15டி சீரீஸ் (Xiaomi 15T Series) உடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்படலாம் என்று சில நம்பகமாக லீக்ஸ் தெரிவிக்கின்றன.

ஷாவ்மீ பேட் மினி டேப்லெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது பெரும்பாலும் ரெட்மி கே பேட் டேப்லெட்டில் உள்ள ஹார்ட்வேர்களை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2.5கே ரெசல்யூஷன் மற்றும் மென்மையான 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 8.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் (அதாவது ஒருகையில் பிடித்து பயன்படுத்தக்கூடிய உண்மையான மினி டேப்லெட்)!

சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400 Plus) சிப்செட் கொண்டு இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ பேட் மினி டேப்லெட் ஆனது 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவை பேக் செய்யலாம்

புஃல் மெட்டல் பாடி உடன் வரும் ஷாவ்மீ பேட் மினி டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ (Android 15 OS) அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) கொண்டு இயக்கப்பட வேண்டும். கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை இது 67W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,500mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

மினி டேப்லெட்களின் மீதான தேவை மற்றும் இதற்காக சந்தையில் நிலவும் போட்டி சூடுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மினி மற்றும் ரெட்மேஜிக்கின் அஸ்ட்ரா டேப்லெட் போன்றவற்றுக்கு எதிராக சியோமி பேட் மினி போட்டியிட வாய்ப்புள்ளது. நிச்சயமாக விலை நிர்ணயத்தில் சியோமி ஒருபடி முன்னே நிற்கும்.

ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த மினி டேப்லெட்டில் சிம் ஸ்லாட் அல்லது ஓஎல்இடி டிஸ்ப்ளே போன்ற கூடுதல் அம்சங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் போதுமான உயர்நிலை அம்சங்கள் மற்றும் குறைந்த விலை ஆகியவற்றின் கலவையானது மாணவர்கள் மற்றும் கேமர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, இது ரூ.32,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்!

ஷாவ்மீ 15டி சீரீஸின் கீழ் என்னென்ன மாடல்களை எதிர்பார்க்கலாம்? இந்த சீரிஸில் ஷாவ்மீ 15டி (Xiaomi 15T) மற்றும் ஷாவ்மீ 15டி ப்ரோ (Xiaomi 15T Pro) என் மொத்தம் 2 மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது கடந்த செப்டம்பர் 2024 இல் அறிமுகமான ஷாவ்மீ 14டி சீரிஸை பின்பற்றும்.

எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, வெண்ணிலா வேரியண்ட் ஆன ஷாவ்மீ 15டி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.67,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ப்ரோ வேரியண்ட் ஆன ஷாவ்மீ 15டி ப்ரோ மாடல் ஆனது ரூ.89,990 க்கு அறிமுக செய்யப்படலாம். சரியான விலை விவரங்கள் செப்.24 நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad Mini Tablet With Pocket Size Design 7500mAh Battery Could Launch Globally on September 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X