Home
Tablets

அறிமுகமானது புது Xiaomi டேப்லெட்.. 12000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஷாவ்மீ நிறுவனம் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் (Xiaomi Pad 9 Pro Max) விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Xiaomi Pad 9 Pro Max Specifications): 13.3-இன்ச் டிஸ்பிளே உடன் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3408 x 2272 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது Xiaomi டேப்லெட்.. 12000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

டெகா கோர் ஷாவ்மீ XRING O3 TSMC 3nm பிராசஸர் உடன் இந்த ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி வரை ரேம் ம்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் ஷாவ்மீ ஹைப்பர் ஓஎஸ் 4.0 மூலம் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இயங்குகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஷாவ்மீ நிறுவனம்.

50எம்பி ரியர் கேமரா உடன் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரியர் கேமரா மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த சாதனத்தில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளியாகி உள்ளது.

8 ஸ்பீக்கர்கள், 6 மைக்குகள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ, நாய்ஸ் ரிடக்ஷன் போன்ற தனித்துவமா வசதிகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 6.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. அதேபோல் இந்த மாடலின் எடை 645 கிராம் ஆகும்.

அறிமுகமானது புது Xiaomi டேப்லெட்.. 12000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

12000எம்ஏஎச் பேட்டரி உடன் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை 4,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.67,530)-ஆக உள்ளது. ரிச் ஒயின் ரெட், பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த டேப்லெட் வெளியாகி உள்ளது. தற்போது இந்த டேப்லெட் சீனாவில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 9 Pro Max with 12000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X