பின்றான்டா இவன்.. 9200mAh பேட்டரி... 67W சார்ஜிங்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. புது Xiaomi பேட்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் சியோமி பேட் 8 (Xiaomi Pad 8) மற்றும் சியோமி பேட் 8 ப்ரோ (Xiaomi Pad 8 Pro) ஆகிய மாடல்கள் பின்னியெடுக்கும்படியான பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கின்றன. 9200mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டுடன் பிரீமியம் காட்டி இருக்கின்றன. இந்த மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த சியோமி பேட் 8 சீரிஸ் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. சியோமி 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களை பார்க்க முடிகிறது. அதேபோல விலையும் பட்ஜெட்டில் இருந்து மிட்-ரேஞ்ச் வரையில் இருக்கிறது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

சியோமி பேட் 8, 8 ப்ரோ அம்சங்கள்(Xiaomi Pad 8, 8 Pro Specifications): இந்த மாடல்களில் 11.2 இன்ச் (3200 x 2136 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஸ்டைலஸ் சப்போர்ட் கிடைப்பதால், அதில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப எச்டிஆர்10 (HDR10), டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் வெட்-ஹேண்ட் டச் சப்போர்ட் கிடைக்கிறது. சியோமி பேட் 8 மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. ப்ரோ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Snapdragon 8 Elite) வருகிறது.
இந்த மாடல்களில் அட்ரியோ ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. பேட் 8 மாடலில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பேட் 8 ப்ரோ மாடலில் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ப்ரோ மாடலில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த மாடல்களில் 9200mAh பேட்டரி கிடைக்கிறது.
ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் வேறுபாடுகிறது. ஆகவே, பேட் 8 மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. பேட் 8 ப்ரோ மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கிடைக்கிறது. 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்குகள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.
சியோமி பேட் 8 மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,344ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,075ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,805ஆக இருக்கிறது. இதுபோக ரூ.33,556 ஆரம்ப விலையில் நானோ சாப்ட் லைட் எடிஷன் கிடைக்கிறது. .
சியோமி பேட் 8 ப்ரோ மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,799 விலையில் தொடங்குகிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.48,475ஆக இருக்கிறது. இதில் ரூ.48,475 ஆரம்ப விலையில் நானோ சாப்ட் லைட் எடிஷன் கிடைக்கிறது. .கிரீன், ப்ளூ, பிளாக் கலர்களில் சீனாவில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








