அவசரப்பட்டு எந்த டேப்லெட் மாடலும் வாங்காதீங்க.. பிப்.28 வருகிறது புது சியோமி டேப்லெட்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி பேட் 8 (Xiaomi Pad 8) மாடலை வரும் பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சியோமி பேட் 8 மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி பேட் 8 அம்சங்கள் (Xiaomi Pad 8 Specifications): 11.2 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி டேப்லெட் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் சியோமி பேட் 8 மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி சியோமி பேட் 8 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
குறிப்பாக அட்ரியோ ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. மேலும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட நான்கு ஸ்பீக்கர்கள் உடன் சியோமி பேட் 8 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனேவ இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். 4 மைக்குகள் இந்த சாதனத்தில் உள்ளன.
HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சியோமி பேட் 8 மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
சியோமி பேட் 8 மாடலில் 13எம்பி ரியர் கேமரா வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
9200எம்ஏஎச் பேட்டரி உடன் சியோமி பேட் 8 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி சியோமி பேட் 8 மாடலில் உள்ளது. மேலும் வைஃபை 7, புளூடூத் 5.4 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் இந்த சியோமி பேட் 8 மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications