அதிர போகுது மார்க்கெட்.. 10,610mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Xiaomi டேப்லெட்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7S Pro) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது முதலில் இந்த டேப்லெட் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் இந்த டேப்லெட் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சியோமி பேட் 7எஸ் ப்ரோ மாடலின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சியோமி பேட் 7எஸ் ப்ரோ அம்சங்கள் (Xiaomi Pad 7S Pro Specifications): 12.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி பேட் 7எஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும் என்பதால் கேமிங்இ எடிட்டிங் போன்ற வசதிகளுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

இதுதவிர எச்டிஆர் 10, டால்பி விஷன் போன்ற டிஸ்பிளே அம்சங்களும் இந்த புது சியோமி டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் சியோமியின் 3.4ஜிகாஹெர்ட்ஸ் Xring O1 பிராசஸர் உடன் இந்த டேப்லெட் வெளியாகும். குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி ரியர் கேமரா உடன் சியோமி பேட் 7எஸ் ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சியோமி பேட் 7எஸ் ப்ரோ மாடல் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் எடை 560 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,610mAh பேட்டரி வசதியுடன் இந்த சியோமி பேட் 7எஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (quad speakers) இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி பேட் 7எஸ் ப்ரோ மாடலில் உள்ளன.
குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த அசத்தலான சியோமி பேட் 7எஸ் ப்ரோ மாடல் அறிமுகமாகும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த சியோமி டேப்லெட் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களுடன் இந்த டேப்லெட் மாடலில் இருக்கும்.


Click it and Unblock the Notifications