புதிய சியோமி டேப்லெட் அறிமுகம்.. 12000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி பேட் 7 அல்ட்ரா (Xiaomi Pad 7 Ultra) டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது சியோமி நிறுவனம். அதாவது இந்த புதிய டேப்லெட் மாடல் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி பேட் 7 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi Pad 7 Ultra specifications): 14-இன்ச் 3.2கே ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் இந்த சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான XRING O1 சிப் உடன் இந்த சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மேம்பட்ட கேமிங் அனுபவத்தைத் தரும்.
50எம்பி ரியர் கேமரா வசதியுடன் இந்த சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல். குறிப்பாக இந்த டேப்லெட் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த பேட்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 8 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
12000mAh பேட்டரி உடன் சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை சார்ஜ் விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எப்சி, 4 மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. மிஸ்டி பர்பிள் (Misty Purple), கிளாசிக் பிளாக்(classic black) நிறங்களில் இந்த டேப்லெட் வாங்க கிடைக்கும்.
சியோமி பேட் 7 அல்ட்ரா விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதி சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல் விலை 5699 yuan (இந்திய மதிப்பில் ரூ.68,055)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வசதி சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.71,640)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி வசதி சியோமி பேட் 7 அல்ட்ரா மாடல் விலை 6799 yuan (இந்திய மதிப்பில் ரூ.81,915)


Click it and Unblock the Notifications








