Home
Tablets

வாங்குனா இந்த Xiaomi டேப்லெட் வாங்கணும்.. 120W சார்ஜிங்.. 10-இன்ச் டிஸ்பிளே.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் அடுத்து சியோமி பேட் 7 ப்ரோ மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சியோமி டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இதன் அம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி பேட் 7 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Pad 7 Pro Specifications): 10-இன்ச் OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி பேட் 7 ப்ரோ அறிமுகமாகும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த சியோமி டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வாங்குனா இந்த Xiaomi டேப்லெட் வாங்கணும்.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வசதியுடன் இந்த சியோமி பேட் 7 ப்ரோ வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேசமயம் இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட சிப்செட் வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் சியோமி பேட் 7 ப்ரோ மாடலில் கேமிங் பிரியர்களை கவரும்படி, அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU)கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இது சிறந்த கேமிங் அனுபவத்தைத் தரும். மேலும் HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ( Android 14) இயங்குதள வசதியுடன் இந்த டேப்லெட் அறிமுகமாகும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சியோமி பேட் 7 ப்ரோ விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்ஸ், நான்கு மைக்ரோஃபோன்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி பேட் 7 ப்ரோ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த சியோமி பேட் 7 ப்ரோ மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி பேட் 7 ப்ரோ ரியர் கேமரா பொறுத்தவை, 50எம்பி கேமராவுடன் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளன. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் இந்த டேப்லெட் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

வாங்குனா இந்த Xiaomi டேப்லெட் வாங்கணும்.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

10000எம்ஏஎச் பேட்டரி (10000mAh battery) உடன் இந்த சியோமி பேட் 7 ப்ரோ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இதன் பேட்டரி சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி பேட் 7 ப்ரோ ஆனது இந்தியாவில் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் இருக்கும். அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 7 Pro Key Specifications Leaked Online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X