Home
Tablets

யாருமே எதிர்பார்க்கல.. டால்பி அட்மாஸ்.. 8850mAh பேட்டரி.. இந்தியாவில் புது Xiaomi டேப்லெட் அறிமுகம்..

சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி பேட் 7 (Xiaomi Pad 7) மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 8850எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது சியோமி பேட் 7 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சியோமி பேட் 7 அம்சங்கள் (Xiaomi Pad 7 Specifications): 11-இன்ச் டிஸ்பிே உடன் வெளிவந்துள்ளது சியோமி பேட் 7 சாதனம். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, ஏஐ எச்டிஆர் என்ஹான்ஸ்மென்ட் (AI HDR enhancement), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

யாருமே எதிர்பார்க்கல.. இந்தியாவில் புது Xiaomi டேப்லெட் அறிமுகம்..

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சியோமி டேப்லெட். எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி பேட் 7 மாடல். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு 12ஜிபி வரை மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த சியோமி டேப்லெட்.

13எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் சியோமி பேட் 7 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த சியோமி டேப்லெட்

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள் உள்ளிட்ட சிறப்பான வசதிகள் உடன் சியோமி பேட் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP62 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

யாருமே எதிர்பார்க்கல.. இந்தியாவில் புது Xiaomi டேப்லெட் அறிமுகம்..

8850mAh பேட்டரி உடன் சியோமி பேட் 7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. கிராஃபைட் கிரே (Graphite Grey), மிராஜ் பர்பிள் (Mirage Purple), சேஜ் கிரீன் (Sage Green) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்கிவிட முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சியோமி பேட் 7 விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.30,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி நானோ டெக்ஸ்சர் டிஸ்ப்ளே எடிஷன் (Nano Texture Display Edition) விலை ரூ. 32,999-ஆக உள்ளது. வரும் ஜனவரி 13-ம் தேதி அமேசான், எம்ஐ.காம் போன்ற தளங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 7 Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X