ஆர்டர் போட்ருங்க.. 8850mAh பேட்டரி.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் XIAOMI டேப்லெட்.. எந்த மாடல்?
ஷாவ்மீ நிறுவனத்தின் ஷாவ்மீ பேட் 7 மாடல் ஆனது தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த டேப்லெட் மாடல் ஸ்னாப்டிராகன் சிப்செட், டால்பி விஷன், 8850mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஷாவ்மீ பேட் 7 மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.33,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஷாவ்மீ பேட் 7 அம்சங்கள் (Xiaomi Pad 7 Specifications): ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஷாவ்மீ டேப்லெட். எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
11-இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது ஷாவ்மீ பேட் 7 சாதனம். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, ஏஐ எச்டிஆர் என்ஹான்ஸ்மென்ட் (AI HDR enhancement), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஷாவ்மீ ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஷாவ்மீ பேட் 7 மாடல். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு 12ஜிபி வரை மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஷாவ்மீ டேப்லெட்.
அதேபோல் ஷாவ்மீ பேட் 7 மாடல் 13எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஷாவ்மீ டேப்லெட்.

அதுவும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள் உள்ளிட்ட சிறப்பான வசதிகள் உடன் ஷாவ்மீ பேட் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP62 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.
8850mAh பேட்டரி உடன் ஷாவ்மீ பேட் 7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. கிராஃபைட் கிரே (Graphite Grey), மிராஜ் பர்பிள் (Mirage Purple), சேஜ் கிரீன் (Sage Green) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications